Tamil Cinema News | சினிமா செய்திகள்
“இவர் தான் ஒரிஜினல் காலா”- போட்டோவுடன் ஸ்டேட்டஸ் தட்டிவிட்ட கஸ்துரி !
Published on

காலா என்கிற கரிகாலன்
ஜூன் 7 வெளியான பொலிட்டிக்கல் ட்ராமா ஜானர் படம் தான் காலா. ஏற்கனவே மலேசிய வாழ் மக்களின் உரிமைக்காக போராடினார் கபாலி. இந்த காலா தாராவியில் ஒடுக்கப்பட்ட மக்களின் நில பிரச்சனைக்காக போராடியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் படங்களிலேயே மிகவும் சுமாரான ஒபெநிங் அமைந்த படம் இது தான். படம் ரிலீஸாகியும் எதிர் மறை விமர்சனமே அதிகம் வந்துள்ளது.
கஸ்துரி ஷங்கர்
நடிகை கஸ்துரி தன் ட்விட்டரில் காலா பற்றி தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.
“காலா முழுக்க முழுக்க ரஞ்சித் தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்ல சப்போர்ட் கொடுத்துள்ளனர்.” என்று கூறியுள்ளார்.
இவரின் கருத்தை சம்மதித்தும், எதிர்த்தும் பலர் டீவீட்டினார்கள்.
