India | இந்தியா
பலான விஷயங்களுக்கு வெளிநாடு.. வாய்விட்டு மாட்டிய கஸ்தூரி.. அது எப்படி உங்களுக்கு தெரியும் என கலாய்த்த ரசிகர்கள்
சமீப காலமாக பிரபல நடிகை கஸ்தூரி அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிகம் மூக்கை நுழைத்து வருவதாக சமூக வலைத்தளங்களில் கிழித்து வருகின்றனர். அவரும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து சமூக கருத்துக்களை தன்னுடைய டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் மதுக்கடைகளை திறந்த அரசாங்கத்தை நேரடியாக விமர்சிக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அதில் மதுக் கடைகள் மட்டுமின்றி அதிகாரப்பூர்வமாக கஞ்சா, ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை விற்றால் இன்னும் அரசுக்கு சவுகரியமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பலான விஷயங்களுக்கு வெளிநாடு செல்பவர்களை தன்னுடைய நாட்டிலேயே அதற்கேற்ற விடுதிகளை அமைத்து அதன் மூலம் அரசு நல்ல காசு பார்க்கலாமே என திகட்ட திகட்ட திட்டி வருகிறார்.
அரசை விமர்சிப்பது சரி, பலான விஷயங்களுக்கு பல பேர் நாட்டை விட்டு வெளியில் செய்கிறார்களே அது எப்படி உங்களுக்கு தெரியும் என கஸ்தூரியை பார்த்து கேள்வி எழுப்பியுள்ளனர் ரசிகர்கள்.
ஒருவேளை நீங்களும் அதற்காக வெளியில் செல்கிறீர்களா எனவும் வெளுத்து வாங்கி வருகின்றனர். இதனால் திருடனுக்கு தேள் கொட்டியது போல் அமைதியாக உள்ளாராம் கஸ்தூரி.
