Connect with us

Cinemapettai

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா.. சும்மா இருக்கும் விஜய் அஜித் ரசிகர்களை சீண்டிய கஸ்தூரி

kasthuri

Tamil Nadu | தமிழ் நாடு

நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா.. சும்மா இருக்கும் விஜய் அஜித் ரசிகர்களை சீண்டிய கஸ்தூரி

தல-தளபதி ரசிகர்கள் சண்டையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்து அவ்வப்போது வாங்கிக் கட்டிக் கொள்வதே நடிகை கஸ்தூரிக்கு வேலையாக போய்விட்டது.

தமிழகத்தில் தல தளபதி ரசிகர்களை பற்றி சொல்லவா வேண்டும். ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு தங்களது கதாநாயகர்களை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதை பார்க்கும் மற்ற சினிமாக்காரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்திவிடும்.

அந்த அளவு தீவிர ரசிகர்கள். அதற்கும் மேல் ஒருவரை ஒருவர் மாறி மாறி சண்டை போட்டுக்கொள்ளும் போது யாரேனும் உள்ளே வந்தால் அவ்வளவுதான். வளச்சு வளச்சு அடிப்பார்கள் நம்ம தல தளபதி ரசிகர்கள். அப்படிதான் ட்விட்டரில் நேற்று நடந்த சண்டை.

வழக்கம் போல் அவ்வப்போது தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் போடும் சண்டை எதற்கு என்று தெரிந்து கொள்ளவே நமக்கு ஒரு யுகம் ஆகிவிடும். அட போரடிக்கும் போதெல்லாம் சண்டை போடுவாங்கன்னா பார்த்துக்குங்க.

அப்படித்தான் நேற்று தல அஜித்தை பற்றி தளபதி ரசிகர்களும் தளபதி விஜய்யை பற்றி தல அஜித் ரசிகர்கள் மிக மோசமான ஹேஸ்டேக்களை உருவாக்கி டுவிட்டரில் சண்டை போட்டு வந்தனர். இந்திய அளவில் நம்பர் 1 இடத்தில் இருந்த இந்த சண்டை தற்போது வரை முடிந்தபாடில்லை.

இதைப் பார்த்த நடிகர் கஸ்தூரி ட்விட்டரில், தல அஜித் மற்றும் தளபதி விஜய் ரசிகர்கள் இப்படி செய்வது அவர்களுக்கு அவமானத்தை ஏற்படுத்துமே தவிர எந்த நல்ல விஷயமும் செய்யாது எனவும் கூறியுள்ளார். மேலும் ஊரே பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில் கூட உங்களது சில்லி தனமான வேலையை செய்து கொண்டுதான் இருப்பீர்கள் எனவும் கூறியுள்ளார்.

இதனைப் பார்த்த தல தளபதி ரசிகர்கள், எங்க சண்டை இருக்கட்டும், சினிமாக்காரர்களுக்கு நீங்கள் இன்னும் உதவி செய்தீர்கள் என பதிலுக்கு கேள்வி கேட்டு கஸ்தூரியை ஓட விட்டனர்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Tamil Nadu | தமிழ் நாடு

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top