Tamil Cinema News | சினிமா செய்திகள்
வனிதா பேசிய கேவலமான பேச்சி.. அமைதியா பொறுமையா காய் நகர்த்தும் கஸ்தூரியின் பதிலடி
சமீபகாலமாக வனிதா விஜயகுமாரின் பஞ்சாயத்து தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தியாக வலம் வருகிறது. தியேட்டர்களில் இல்லாத என்ஜாய்மென்ட்டை ரசிகர்கள் ட்விட்டர் வாயிலாக அனுபவித்து வருகின்றனர்.
வனிதா விஜயகுமார் மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பீட்டர் பால் தனது முன்னாள் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே இரண்டு கணவர்கள் மற்றும் ஒருவருடன் லிவிங் டு கெதர் என சகலமும் சவுகரியமாக வாழ்ந்து வந்தவர் வனிதா. இந்நிலையில் நான்காவதாக ஒருவருடன் பழகி வருகிறார். மூன்றாவது முறையாக முறையான வழியில் அவரை திருமணமும் செய்து கொண்டார்.
அதேபோல் நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். அரசியல்வாதிகளையும் நடிகர்களையும் தைரியமாக எதிர்த்து குரல் கொடுப்பவரும் இவர்தான். அந்தவகையில் பீட்டர் பால் முன்னாள் மனைவி எலிசபெத்தை நேரடியாக பேட்டி கண்டார்.
அதில் எலிசபெத், பீட்டர் பால் தன்னை எப்படியெல்லாம் ஏமாற்றினார் என்பதை புட்டு புட்டு வைத்தார். அதேபோல் வனிதா பணத்துக்காகத்தான் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் பணம் கேட்டதாக பொய்யான தகவல்களை இருவரும் கூறி வருகின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.
இதை தீர விசாரித்த கஸ்தூரி, தன்னுடைய கருத்துக்களை தைரியமாக வெளியிட்டார். ஆனால் வனிதா ட்விட்டர் வாயிலாக உனக்கே புருஷன் இல்லை, நீ அவளுக்கு சப்போர்ட் பண்ண போறியா என கொச்சையாக பேசியுள்ளார் வனிதா. ஆனால் கஸ்தூரி பொறுமையாக சரியான பதிலடி கொடுத்துள்ளார்.
எனக்கு கணவர் இல்லை என்றாலும் பரவாயில்லை, உன்ன மாதிரி நான் அடுத்தவங்க புருஷனை கூட்டிட்டு வந்து வாழ்க்கை நடத்தல என ஒரே போடாக போட்டு தள்ளினார்.

kasturi-vanitha-tweet
மேலும் ரசிகர்கள் வனிதாவை பார்த்து நீங்க எப்படிப்பட்ட ஆள், எத்தனை புருஷன் உங்களுக்கு என எல்லாமே தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது என வனிதாவை கிழி கிழி என்று கிழித்து வருகின்றனர். கஸ்தூரி எலிசபெத்திற்கு கடைசிவரை உறுதுணையாக நிற்பதாக வாக்கு கொடுத்துள்ளார்.
