Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீண்டும் மீண்டும் விக்ரமை வம்புக்கு இழுக்கும் கஸ்துரி ட்வீட்கள்! கடுப்பாகிய ரசிகர்கள்

நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில் விக்ரமை மீண்டும் வம்புக்கு இழுத்திருக்கும் விவகாரம் வைரலாக பரவி வருகிறது.
கோலிவுட்டில் ஆத்தா உன் கோயிலிலே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி. அதை தொடர்ந்து, அவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தன. நடிகையாக அங்கீகரிக்கப்பட்ட கஸ்தூரியின் அமைதியான முகமே ப்ளஸாக கருதப்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் அதிகமாக நடித்திருக்கிறார். சிவாவின் நடிப்பில் தமிழ் படம் வெளியான போது கஸ்தூரியின் குத்து பாடல் பலர் மத்தியில் ஷாக்கை ஏற்படுத்தி வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து, தற்போது இரண்டாம் பாகத்திலும் ஒரு பக்கா டான்ஸ் போட்டு இருக்கிறார்.
அண்மை காலமாக ட்விட்டரில் செம ஆக்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி. நாட்டில் நடக்கும் சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் தனது கருத்தை மறக்காமல் தெரிவித்து வருகிறார். அந்த ட்வீட் அவருக்கும் வரவேற்பை விட எதிர்ப்புகளை அதிகமாக கொடுக்கிறது. சமீபத்தில், வெளியாகிய சாமி 2 படத்தின் ட்ரைலர் குறித்து நடிகை கஸ்தூரி தனது கருத்தை பதிவு செய்தார். முந்தா நாளு வந்த டீஸர் ல கலாய்ச்சிருந்த… அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு ட்ரைலெர். ஸ்ஸ்ஸப்பா ! என ட்வீட்டி இருந்தார். இது சமூக வலைத்தளத்தில் பெரும் வைரலானது. தொடர்ந்து, சொந்த பொண்ணை விட சின்ன வயசு பொண்ணோட டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா ? அந்த அளவு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல, பூதம் இல்ல. போடா மூடிக்கிட்டு என தடாலடியாக பதிவு செய்தார். இது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தனது ட்விட்டரில் அவர் காக்கிச்சட்டை அணிந்திருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு நானும் போலீஸ் தான். ஆனால், சாமி இல்லை சாதா என ட்வீட்டி இருந்தார். இதனால் விட்ட பஞ்சாயத்தை நெட்டிசன்கள் மீண்டும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
