தனது தீவிர அரசியல் பயணத்தை நேற்று தொடங்கிய கமல், மதுரையில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் தனது புதிய கட்சியின் பெயர் ‘மக்கள் நீதி மய்யம்’ என அறிவித்தார்.

makkal needhi maiam

கமல் தொடங்கியிருக்கும் புதிய கட்சிக்கு, திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, கமல்ஹாசனின் கட்சி குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிவு போட்டுள்ளார்.

kasthuri

‘சினேகன், வையாபுரி, கமல், விஜய் டிவி மகேந்திரன், ஸ்ரீபிரியா.. மொத்த பிக்பாஸ் டீமும் இறங்கியிருக்கு. விவோதான் ஸ்பான்ஸரா? எலிமினேஷன் கூட இருக்கும்ல’ என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் மய்யம் எனக்கொரு அய்யம் என்று வேறு டீவீட்டியுள்ளார்.

சினிமாபேட்டை கொசுறு நியூஸ்

தமிழ் படத்தின் “குத்து விளக்கு” பாடலை வைத்து ஒருவர் ட்வீட் போட, அதனை ரீ- ட்வீட் சேய்துள்ளார் கஸ்தூரி.