பொம்பள சோக்குக்காக நடிக்க வராங்களா.? கஸ்தூரி ஆவேசம்

Kasthuri : மலையாளத்தில் பூதாகரத்தை கிளப்பிய ஹேமா கமிட்டியின் அறிக்கைக்கு பிறகு பல நடிகைகள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார்கள். இதில் ராதிகா போன்ற பிரபலமான நடிகை கூட சினிமாவில் அட்ஜஸ்மென்ட் நடப்பதை பற்றி கூறியிருந்தார்.

அதுவும் பெரிய நடிகர்கள் மீது தொடர்ந்து புகார் வருவது அனைத்து சினிமாவிலும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இந்த சூழலில் நடிகை கஸ்தூரி ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்திருந்தார். அப்போது நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் வாய்ப்பை பெறுகிறார்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதனால் ஆவேசம் அடைந்த கஸ்தூரி யாரும் அட்ஜஸ்மென்ட் செய்ய வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு வரவில்லை. பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் இதுபோன்ற கருத்துக்களை வைத்து வருகிறார்கள். காலையில் மேக்கப் போட்டு, கண் எரிச்சலோடு கிளிசரின் போட்டு வெயில், மழை என்று பாராமல் நடிக்கிறார்கள்.

அட்ஜஸ்ட்மெண்ட் குறித்த பேசிய கஸ்தூரி

அதேபோல் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் பொம்பள சோக்கு வேண்டும் என்றால் வேறு எங்காவது சென்றிருப்பார்கள். சினிமா மீதுள்ள ஈடுபாடு காரணமாக தான் பல கஷ்டங்களை சந்தித்து வருகிறார்கள். சினிமா என்பது முற்றிலும் வேறுபட்டது.

ஆனால் சினிமாவில் நடிக்கும் நடிகைகள் கேமராவுக்கு முன் எப்படி இருக்கிறார்களோ பின்னாடியும் அதேபோல் இருக்க வேண்டும் என்று சிலர் எண்ணுகிறார்கள். அதுவும் கவர்ச்சி நடிகைகளின் நிலைமை தான் ரொம்ப பாவம்.

அவர்களால் நிம்மதியாக சாப்பிட கூட முடியாது. அந்த அளவுக்கு இந்த சமுதாயம் அவர்களை ஏளனமாக பேசி வருகிறார்கள். எப்போதுமே ஒரு சமூகம் ஆணை தான் குற்றம் சொல்லும். பெண்கள் எப்படி நடந்தாலும் சரிதான் சேற்றை வாரி பூசும் என கஸ்தூரி ஆவேசமாக பேட்டியில் கூறி இருக்கிறார்.

சினிமாவையே உலுக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை

- Advertisement -spot_img

Trending News