Connect with us
Cinemapettai

Cinemapettai

நான் கன்னத்தை தடவியதைதான் சொன்னேன்.. கஸ்தூரி அடித்த திடீர் பல்டி

kasthuri

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நான் கன்னத்தை தடவியதைதான் சொன்னேன்.. கஸ்தூரி அடித்த திடீர் பல்டி

சர்ச்சை பதிவை வெளியிட்ட கஸ்தூரி அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்

Kasthuri: “என்னய்யா இது. பல்லாண்டு வாழ்க படத்துல வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க”. இப்படி ஒரு பதிவு போட்டுள்ளார். இந்த சர்ச்சை பதிவை வெளியிட்ட கஸ்தூரி அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்

கஸ்தூரி வெளியிட்டுள்ள பதிவு :

“MGR காதல் காட்சியில் நடித்ததில் , கதாநாயகியின் கன்னத்தை, கரத்தை, தடவியதில் என்ன தவறு உள்ளது? அதை மேற்கோள் காட்டுவதில் என்ன தவறு உள்ளது? இதில் கண்ணியமும் பெண்ணியமும் என்ன கெட்டுவிட்டது? நான் வாத்தியாரின் காதல் ரசம் சொட்டும் பாடல்களை ரசிக்கும் எண்ணற்றவர்களில் ஒருவள். அவரை விமர்சிக்கும் எண்ணம் சிறிதும் எனக்கு இல்லை.

புரட்சி தலைவர் ஒப்பற்ற தலைவர், தொண்டர்களின் இதயதெய்வம் என்பது எவ்வளவு உண்மையோ, நான் விரும்பும் நவரசகலைஞன் என்பதும் உண்மை. தெய்வத்தை இழிவுபடுத்தி விட்டேன் என்ற குற்றசாட்டை வன்மையாக மறுக்கிறேன். காமம் இழிவு, உடல் ரீதியான வெளிப்பாடுகள் தமிழ் கலாச்சாரத்திற்கு குறைவு என்ற மனப்பான்மையே இதற்கு காரணம். இந்து மத தெய்வங்கள் கூட காதல் லீலை புரிந்தவர்கள்தான்.

உடனே அமைதிப்படை அல்வா , தத்தோம் தகதிமி தோம் என்று தூக்கி கொண்டு வருபவர்களுக்கு – நான் மிகவும் அற்பணிப்புடன் நடித்த காட்சிகள் அவை. பொய்யாக அழுவது சுலபம். ஆக்ரோஷமாக நடிப்பது சுலபம். ஆனால் கவர்ச்சியை வெளிப்படுத்த மிகுந்த திறமையும் உழைப்பும் தேவை.

MGR அவர்களை தலைவராகவும் தெய்வமாகவும் மட்டும் பார்த்து நடிகராக அவர் வரலாற்றை மறைப்பது ரசிகனுக்கு அழகல்ல.

இருப்பினும் இதில் யார் மனமும் புண் பட்டிருந்தால், என் மனமார வருந்துகிறேன்”. என்று ஒரு சப்பை கட்டு கட்டியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top