Entertainment | பொழுதுபோக்கு
தனுஷ் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கிய 6 படங்கள்.. செம படம்லாம் எடுத்துருக்காருப்பா மனுஷன்
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கஸ்தூரி ராஜா. அது மட்டும் இல்லாமல் ஒரு தயாரிப்பாளராக, இசையமைப்பாளராக பல முகங்களைக் கொண்டவர்.
2006 லிருந்து 2018 வரை சினிமாவை விட்டு விலகி இருந்தார் என்று தான் கூற வேண்டும். செல்வராகவன் மற்றும் தனுசை தமிழ் சினிமாவிற்கு தத்து கொடுத்தவர் கஸ்தூரி ராஜா. இயக்குனர் விசுவின் அசிஸ்டெண்டாக கிட்டத்தட்ட 16 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். இவர் வெற்றி கண்ட படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.
என் ராசாவின் மனசிலே: கஸ்தூரிராஜா இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரிப்பில் 1991-ல் வெளிவந்த படம் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தில் ராஜ்கிரண், மீனா, ஸ்ரீப்ரியா, நம்பிராஜன், கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு மிக அற்புதமாக இசையமைத்து இருப்பார், அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. வடிவேலு அறிமுகமான முதல் படம் இது தான், முரட்டுத்தனமான கிராமத்து கதாபாத்திரத்தில் ராஜ்கிரண் நடித்திருந்தார். மீனா மென்மையான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார், இவர்கள் இருவருக்கும் இடையே வாழ்க்கையில் ஏற்படும் சுகதுக்கங்களை அற்புதமாக இயக்கி இருப்பார் கஸ்தூரிராஜா. இந்த படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற படமாகப் பார்க்கப்பட்டது.
ஆத்தா உன் கோயிலிலே: கஸ்தூரிராஜா இயக்கத்தில் 1991-ல் வெளிவந்த படம் ஆத்தா உன் கோயிலிலே. இந்த படத்திலும் வடிவேலு மற்றும் செந்திலின் காமெடி நல்ல வரவேற்பை பெற்றது, மக்கள் மத்தியில் இந்த படம் வெற்றியும் அடைந்தது. கஸ்தூரி,செல்வா போன்ற பிரபலங்கள் நடித்துருபார்கள்.
சோலையம்மா: ராகுல், சுகன்யா, கரிகாலன், செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1992-இல் வெளிவந்த படம் சோலையம்மா. இப்படத்திற்கு தேவா இசை அமைத்திருப்பார். சமுதாயத்தில் ஒரு பெண் படும் அவல நிலையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டு இருக்கும். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாக பார்க்கப்பட்டது.
நாட்டுப்புற பாட்டு: செல்வா, சிவக்குமார், குஷ்பு, மனோரமா,கவுண்டமணி, செந்தில் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1996 வெளிவந்த படம் நாட்டுப்புறப்பாட்டு. இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருப்பார், அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற ரசிக்கும் படியாக அமைந்தது.
எட்டுப்பட்டி ராசா: கஸ்தூரிராஜா இயக்கத்தில் நெப்போலியன், குஷ்பு, ஊர்வசி, பொன்வண்ணன், மணிவண்ணன் போன்ற பிரபலங்கள் நடிப்பில் 1997-இல் வெளிவந்த படம் எட்டுப்பட்டி ராசா. தனது கிராமத்திற்க்காக போராடும் கதாபாத்திரத்தில் நெப்போலியன் நடித்திருப்பார். இவரைக் கல்யாணம் கட்டிபதற்காக குஷ்பு மட்டும் ஊர்வசிக்கு இடையே பெரும் போட்டி நடக்கும். கிராமத்து மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற வெற்றியும் பெற்றது எட்டுபட்டிராசா.
துள்ளுவதோ இளமை: தனுஷ்,ஷெரின், ரமேஷ் கண்ணா போன்ற பிரபலங்கள் நடிப்பில் 2002-இல் வெளிவந்த படம் துள்ளுவதோ இளமை. கஸ்தூரி ராஜா தனது மகன்களை அறிமுகப்படுத்திய படம் என்றே கூறலாம். சினிமாவில் கால்பதிக்க வேண்டுமென்றால் அப்போது திறமையைத் தாண்டி, யாருடையது சிபாரிசு தேவைப்படும். அந்த நிலை இரண்டு மகன்களையும் சினிமாவில் இறக்கி விட்டு, தற்போது சினிமாவிற்கு அர்ப்பணித்து விட்டார் என்றே கூறலாம்.
இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை, இந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. இளசுகளுக்கு ஏற்படும் வயசுக்கோளாறு மையப்படுத்தி இந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருக்கும், அனைத்து காட்சிகளும் மிக தத்ரூபமாக அமைக்கப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றியும் பெற்றது.
