fbpx
Connect with us

ஆத்திரத்தை அடக்க முடியவில்லை! கண்ணீருடன் குமுறிய நடிகை கஸ்துரி – வீடியோ

kasthuri actress

News | செய்திகள்

ஆத்திரத்தை அடக்க முடியவில்லை! கண்ணீருடன் குமுறிய நடிகை கஸ்துரி – வீடியோ

நடிகைகள் பொதுவாக எதற்கும் பெரிதாய் கருத்துக்களை தெரிவிப்பதில்லை. ஆனால் தற்போது நடந்துகொண்டிருக்கும் எல்லா வித பிரச்சனைகளுக்கும் முன் வந்து கருத்து தெரிவிக்கிறார் நடிகை கஸ்தூரி அவர்கள்.

நேற்று ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கண்ணீருடன் தனது கருத்துக்களை வேதனையோடு பகிர்ந்தார். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு.

 

இன்று அவர் அளித்திருந்த பேட்டியில் அவர் கூறியதாவது.

“சிறுமியின் மரணம் குறித்து எனது ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை.
அந்த பொண்ணு தோத்துப் பொய் சாகலை, துரோகத்தினால் இறந்திருக்காள்.

கொழுந்துவிட்டு எறிந்த போது கண்டுகொள்ளாத ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி, இப்போது மட்டும் குமுறுவது ஏன்? மருத்துவ ஆசையை வளர்த்துவிட்டது எதிர் கட்சிகள்தான். கட்டாயம் நியாயம் கிடைக்கும் என்று சொல்லி சொல்லி அவளுக்கு துணை நிற்பதுபோல் நின்று துரோகம் செய்துவிட்டனர்.

Actress-Kasthuriஜாதி குறித்த இட ஒதுக்கீட்டில் எனக்கு உடன்பாடு இல்லை, எனினும் ஒரு தாழ்ந்த சாதி மாணவர் எடுக்கும் மதிப்பெண் குறைந்திருந்தாலும் அவர்கள் தகுதியுள்ளவர்கள்தான். குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் தவறான மருத்துவர்கள் என்ற கருத்தை எதிர்கிறேன்.”

இவ்வாறு அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: உண்மை பொய்யை உலகறியாது சொல்பவனே ஞானி. அனிதா விசயத்தில் பல ஞானிகள் புதிது புதிதாய் தோன்றுகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top