fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

பயந்துட்டியா குமாரு.. வனிதாவை விரட்டி விரட்டி வச்சு செய்யும் கஸ்தூரி.. ஃபுல் என்ஜாய்மென்ட்

kasturi-vanitha-cinemapettai-01

Tamil Nadu | தமிழ் நாடு

பயந்துட்டியா குமாரு.. வனிதாவை விரட்டி விரட்டி வச்சு செய்யும் கஸ்தூரி.. ஃபுல் என்ஜாய்மென்ட்

மூத்த நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தற்போது மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டது தான் சர்ச்சையாக மாறியுள்ளது.

அதுவும் வனிதா பீட்டர் பால் தனது முன்னாள் மனைவியை முறையாக விவாகரத்து செய்வதற்குமுன் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டது தான் பலருக்கும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

சில நாட்களாக செய்தி சேனல்கள் முதல் யூடியூப் சேனல்கள் வரை அனைத்து பக்கங்களிலும் வனிதா மற்றும் அவரது மூன்றாவது கணவர் பீட்டர் பால் பற்றிய செய்திதான் பேசப்பட்டு வருகிறது. பீட்டர் பாலின் முன்னாள் மனைவி எலிசபெத் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நடிகை கஸ்தூரி பிரபல யூடியூப் சேனல் நிறுவனத்திற்காக நேரடியாக அவரை பேட்டி எடுத்தார்.

அதில் எலிசபெத், வனிதா பீட்டர் பாலை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், அவருக்கு ஏதாவது காரணமாக வேண்டியிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார் எனவும் வனிதாவின் மீது குற்றங்களை அடுக்கினார்.

கஸ்தூரியும் தனது நியாயமான கேள்விகளைதான் எலிசபெத்திடம் கேட்டார். அவரும் அதற்கு தகுந்த பதில் அளித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென வனிதா அந்தப் பேட்டியை பற்றியும் கஸ்தூரியை பற்றியும் அவதூறாக கருத்துக்களை டுவிட்டரில் பதிவிட்டார்.

இந்நிலையில் கஸ்தூரி ஒரு காமெடி பீஸ் என அவரை ட்விட்டரில் பிளாக் செய்வதாக தெரிவித்திருந்தார். அதை பார்த்த கஸ்தூரி பயந்துட்டியா குமாரு எனக் கிண்டல் செய்த ட்வீட்  ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதுதானா சிங்கப்பெண் என அநியாயத்துக்கு கிண்டல் செய்துள்ளார்.

vanitha-kasturi-tweet

vanitha-kasturi-tweet

இன்று சமூக வலைதள வாசிகளுக்கு இவர்களது சண்டை தான் கொண்டாட்டமாக மாறியுள்ளது. ஆளாளுக்கு மீம்ஸ் போட்டு தள்ளி வருகின்றனர். அதில் பலரும் கஸ்தூரிக்கு சப்போட்டாவும் வனிதாவுக்கு எதிராகவும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top