Connect with us

காரில் வைத்தே சென்னை மாணவியை நாசம் செய்த நாகர்கோவில் காசி.. இன்ஸ்டாகிராம் காதலால் ஏற்பட்ட விபரீதம்! 

kasi-cinemapettai

Tamil Nadu | தமிழ் நாடு

காரில் வைத்தே சென்னை மாணவியை நாசம் செய்த நாகர்கோவில் காசி.. இன்ஸ்டாகிராம் காதலால் ஏற்பட்ட விபரீதம்! 

நாகர்கோவிலை சார்ந்த காசி என்பவர் பல பெண்களோடு நெருங்கிப் பழகியதோடு அவர்களை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டியதன் மூலம் பணம் பறித்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதைப்பற்றி பாதிக்கப்பட்ட ஏராளமான பெண்கள்  காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இதனடிப்படையில் காசியின் மீது 5 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது சென்னையை சேர்ந்த மாணவியை மிரட்டி காசி  பணம் பறித்தது எப்படி என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அதாவது காசி தன்னை காதலிப்பது போல் நடித்து ஏமாற்றி பணத்தை பறித்ததாக சென்னை மாணவி ஒருவர் காசியின் மீது புகார் அளித்தார். அதன் பேரில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முதற்கட்ட விசாரணையின் முடிவில் சென்னை மாணவியுடன் காசிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தான் பழக்கம் ஏற்பட்டது என்றும், பிறகு அந்தப் பெண்ணை காதலிப்பதாக சொல்லி, சென்னைக்கு நேரில் சென்று அந்த மாணவியை சந்தித்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதுமட்டுமில்லாமல் அந்த மாணவியையும் சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு வருமாறு வற்புறுத்தி அழைத்து வந்ததாகவும், வரும் வழியில் நான்கு வழிச் சாலையில் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு, காரில் வைத்தே உல்லாசம் அனுபவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் அந்த நேரத்தில் தனது கைக்கடிகாரம் மற்றும் செல்போன் மூலம் ரகசியமாக காசி வீடியோ எடுத்ததோடு மட்டுமல்லாமல், அதை காட்டி மிரட்டி மாணவியிடம் பணம் பறித்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த விபரங்களை எல்லாம் அந்த மாணவியின் தனது புகாரில் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் மாணவியிடம் இருந்து காசி எவ்வளவு  பணத்தை மிரட்டி பறித்திருக்கிறார் என்பது குறித்து போலீசார் அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு, கேட்பவர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top