ஃபேஸ்புக் லைவில் தனுஷின் கொடி, கார்த்தியின் காஷ்மோரா ஆகிய படங்கள் வெளியாகி திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுப்படங்கள்

ரிலீஸான அன்றே சில இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது. மறுநாளே திருட்டு விசிடி வந்துவிடுகிறது. இதை ஒழிக்க திரையுலகினர் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது ஃபேஸ்புக் லைவ்.

ஃபேஸ்புக் லைவ்

சில ஃபேஸ்புக் பக்கங்களில் லைவ் மூலம் புதுப்படங்களை லைவாக வெளியிடுகிறார்கள். அந்த பக்கங்களில் வெளியிடும் நேரத்தில் மட்டுமே படத்தை பார்க்க முடியும். படம் அந்த ஃபேஸ்புக் பக்கங்களில் சேவ்(save) ஆகாது.

கொடி

ஃபேஸ்புக் லைவ் மூலம் தீபாவளிக்கு வெளியான தனுஷின் கொடி மற்றும் கார்த்தியின் காஷ்மோரா ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பிரபலங்கள்

பிரபலங்கள் ஃபேஸ்புக் லைவ் வசதி மூலம் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்கள். இந்நிலையில் அந்த வசதியை பயன்படுத்தி சிலர் புதுப்படங்களை சுடச்சுட லீக் செய்து திரையுலகினரின் தலையில் இடியை இறக்குகிறார்கள்.

புது பிரச்சனை

ஒரு படத்தை வெளியிட அவரவர் படாதபாடு படும்போது வசூலை பாதிக்கும் வகையில் புதுப்புது பிரச்சனைகள் எழுகின்றன. இதில் லேட்டஸ்ட் பிரச்சனை ஃபேஸ்புக் லைவ்.