Connect with us
Cinemapettai

Cinemapettai

crpf-kashmir-attack

India | இந்தியா

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத பெரும் தாக்குதல்.. 40 ராணுவ வீரர்கள் மரணம்.. ஒரு தமிழர் வீரமரணம் அடைந்தார்

40 ராணுவ வீரர்கள் மரணம்.. ஒரு தமிழர் வீரமரணம் அடைந்தார்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத கும்பல் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் மரணமடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் தமிழக ராணுவ வீரர் சுப்பிரமணியம் வீரமரணம் அடைந்தார்.

செய்தி சுருக்கம்:

  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் பெரும் தாக்குதல்.
  • உலகத் தலைவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம்
  • தமிழக வீரர் சுப்பிரமணியன் வீரமரணமடைந்தார்

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் அவந்திபுரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் வந்தது எனவே அவர்களை சுற்றிவளைத்து இதற்காக அங்கு ராணுவ வீரர்கள் சென்றனர் அவர்கள் நினைத்தது போலவே அவர்களின் சுற்றிவளைத்தனர்.

அப்போது ஏற்பட்ட தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் நடந்த சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்பொழுது 300 கிலோ எடை கொண்ட வில்வத்தைக் கொண்டு எஸ்யுவி காரில் வந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் வண்டியின் மீது மோதினர்.

இந்த பெரும் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியாயினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதி பொறுப்பேற்றுள்ளனர். இந்த தாக்குதலில் இந்தியாவில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவந்திபுரா பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என எதிர்க்கட்சி ஆளும் கட்சியின் அனைத்து தலைவர்களும் ஒன்றாக செயல்படுகின்றனர்.

தமிழக ராணுவ வீரர் சுப்பிரமணியன்:

தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் என்ற ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் நேற்று நடந்த சண்டையில் உயிரிழந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு திருமணமான சுப்பிரமணியன் பொங்கல் விடுமுறையை முடிந்து பணிக்கு திரும்பியுள்ளார்.

subramani-thoothukudi-kashmir-attack

subramani-thoothukudi-kashmir-attack

வேலைக்கு திரும்பிய சில நாட்களிலேயே வீரமரணம் அடைந்தது தூத்துக்குடி மாவட்டத்தில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகத் தலைவர்கள் கண்டனம்:

நேற்று நடந்த தீவிரவாத சண்டையினால் இந்தியா பாகிஸ்தான் உடன் எம்எப்என் (MFN) என்று கூறப்படும், அதாவது ”மோஸ்ட் பேவர்டு நேஷன்” என்று கூறப்படும் அந்தஸ்தை இந்தியா நீக்கிக் கொண்டுள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.

ஜெர்மனி, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும் தீவிரதாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top