Reviews | விமர்சனங்கள்
சூப்பர் கதைகளின் கதம்பம்- கசட தபற விமர்சனம்
சிம்புதேவன் 23 ம் புலிகேசி தொடங்கி தனது படங்களில் பல்வேறு புது புது முயற்சிகளை செய்து நம்மை அசத்தியவர். இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் கசட தபற. இது ஆ ந்தாலஜி ஜானர் அல்ல ஹைப்பர் லிங்க் சினிமா. தனி கதைகளாக அமைக்காமல் ஒரே கதையோட்டத்தில் உள்ள பிரிவினைகள் தான் படம்.
6 கதைகள் வெவ்வேறு ஒளிப்பதிவாளர், எடிட்டர், இசை அமைப்பாளர் என டெக்கினிக்கல் டீம் அமைத்துள்ளார் இயக்குனர் சிம்பு. ஒரு கதையின் மையக்கதாபாத்திரம் மறுகதையில் துணை கதாபாத்திரம்.
கதை – காதல் வயப்படுகிறார் பிரேம்ஜி ஆனால் பெண்ணின் அப்பா சொல்ல, காதலை பிரிக்கிறார் ரவுடி சம்பத். தன் மகன் ஷாந்தனுவிற்காக ரவுடி தொழிலை விடுகிறார் சம்பத், ஆனால் மகனே அவருக்கு வில்லன் ஆகிறான்.
போலீஸ் தொழிலில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சந்தீப் கிஷன் சந்திக்கும் சவால் ஒருபுறம், வாழ்வில் சாதிக்க வேண்டும் என குறுக்கு வழியை நாடும் ஹரிஷ் கல்யாண் மறுபுறம்.

kasadatabara-cinemapettai
மகனின் மருத்துவ செலவுக்கும் போராடும் விஜயலக்ஷ்மி, போலி மருந்து என கதை நகர; முதலாளிக்கு விசுவாசமாக ஜெயிலுக்கு செல்லும் வெங்கட் பிரபு.
சினிமாபேட்டை அலசல் – ஒரே விஷயத்தை வெவ்வேறு கோணத்தில் பார்ப்பது, ஒருவரின் செயல் அடுத்தவரின் வாழ்க்கையை எப்படி பாதிக்கிறது என்ற இந்த இரண்டு கோட்பாட்டை வைத்தே படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர்.
பிரேம்ஜியின் பகுதி காதல், காமெடி; சாந்தனு பகுதி கோபம், ஆக்ஷன்; சந்தீப் கிஷன் நேர்மை, கொள்கை என சொல்லலாம். ஹரிஷ் கல்யாண் ஆசை, சூது; விஜயலக்ஷ்மி பாசம், வைராக்கியம் மற்றும் வெங்கட் பிரபு பகுதி தர்மம், த்ரோகம் என கூட சொல்லலாம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் செல்லும் பீல் குட் சினிமா. பல இடங்களில் எதோ லிங்க் மிஸ் ஆவது போன்று தோன்றினாலும், லாஜிக் குறை தான் என்றாலும், முழு அனுபவமாக பாஸாகிவிடுகிறது இப்படம்.
சினிமாபேட்டை ரேட்டிங் 3 /5
