Connect with us

Cinemapettai

கரூரில் பிளஸ் 2 மாணவி பள்ளியிலேயே மயங்கி விழுந்து சாவு

karur

Tamil Nadu | தமிழ் நாடு

கரூரில் பிளஸ் 2 மாணவி பள்ளியிலேயே மயங்கி விழுந்து சாவு

கரூரில் அரசுப் பள்ளியில் பயிலும் பிளஸ் 2 மாணவி பள்ளியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பெற்றோர் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .

கரூர் வடக்கு பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தன் .இவரது மகள் கோமதி . கரூர் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.இன்று வழக்கம்போல பள்ளிக்கு சென்ற கோமதி பள்ளியில் உள்ள கழிவறைக்கு சென்று முகம் அலம்பிய தாக கூறப்படுகிறது அப்போது திடீரென அங்கு மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அங்கிருந்த ஆசிரியர்கள் அந்த மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் . ஆனால் அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர் பள்ளிக்கு சென்ற மாணவி உயிரிழந்த சம்பவம் உடனடியாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளி சென்ற மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகும் உடலை வாங்க மறுத்து உடற்கூறு அறை முன்பு பிரேதத்தை வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top