Tamil Nadu | தமிழ் நாடு
கரூர் பஸ்ஸ்டாண்டில் பயங்கர தீ விபத்து.! மக்கள் பதற்றம்..
சமீபகாலமாக ஆங்காங்கே தீ விபத்து நடைபெற்று வருகின்றன. அதற்கு காரணம் முறையான கட்டமைப்பு இல்லாமல் இருப்பது பாதுகாப்பான முறையில் இல்லாமல் இருப்பதே இதற்கு காரணம். சமீபத்தில் கரூர் பஸ் ஸ்டாண்டில் தீ விபத்து நடைபெற்றுள்ளது.
மக்கள் நடமாடும் இடங்களில் எப்போதும் பாதுகாப்பான கடைகளுக்கு மட்டுமே கடை நடத்த உரிமை தர வேண்டும், ஆனால் பல பஸ் ஸ்டாண்டுகளில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கடைக்காரர்கள் கடையை நடத்தி வருகின்றனர்.
கரூர் பஸ் ஸ்டாண்டில் பஸ் வெளிவரும் இடத்தில் ஒரு கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது ஆனால் எதனால் தீப்பிடித்தது என்று தெரியவில்லை, பலரும் பாதுகாப்பில்லாமல் இருந்ததே தீ பிடிப்பதற்கு காரணம் என கூறுகின்றனர். தீப்பிடித்த இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

FireShot
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
