வில்லத்தனமான வேடங்களில் நடித்து வந்த மொட்டை ராஜேந்திரனுக்கு ஆர்யா நடித்த பாஸ் என்ற பாஸ்கரன் படம் காமெடியில் கைகொடுத்தது. அதனை தொடர்ந்து காமெடி வேடங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து
நடித்து வந்தார். கோலிவுட்டில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த காமெடியனாகி விட்டார்.

கருப்பு காக்கா

FLP LAUNCH

இந்நிலையில் இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டரை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் வெளியிட்டார்.

Karuppu Kakka

தருண் பிரபு இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் டேனியல், அஞ்சலி ராவ், ‘ராட்டிணம்’ படப் புகழ் ஸ்வாதி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு விஜய் வல்சன், இசை வெங்கட் ஜோதி. இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் முடிந்து விட்ட நிலையில் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள்.