விஜய் சேதுபதி தொடர்ந்து வித்தியாசமான கதைகள் மூலம் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ரசிக்க வைத்து வருகிறார்.

“ஓரம்போ”, “வ/குவாட்டர் கட்டிங்” படங்களின் இரட்டை இயக்குநர் புஷ்கர் & காயத்ரி இயக்கத்தில், மாதவன் – விஜய் சேதுபதி இரட்டை நாயகர்களாக நடிக்க, டிரைடன்ட் ஆர்ட் ரவிச்சந்திரன், ஒத்துழைப்புடன் ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தயாரித்து, வெளியீடு செய்ய வழக்கமான போலீஸ் – தாதா கதையை வித்தியாசமான திரைக்கதையாக்கிக் கொண்டு வெளிவந்திருக்கும் விறுவிறுப்பானபடம் தான் “விக்ரம் வேதா”.

சட்டத்தின் சப்போர்ட்டுடன் 18 கொலைகளை செய்த என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் விக்ரமுக்கும், தர்மம், நியாயம் எல்லாம் பேசியபடி சட்டத்திற்கு புறம்பாக 16 கொலைகளை செய்த தாதா தாவிற்குமிடையில் நடக்கும் தர்ம, அதர்ம யுத்தம்தான்… “விக்ரம் வேதா” படத்தின் கதையும் களமும்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா படத்தை ரசிகர்கள் அப்படி கொண்டாடினர்.விஜய் சேதுபதியின் நடிப்பில் இன்று வெளியாக இருக்கும் படம் ‘கருப்பன்’. முழுக்க முழுக்க கிராமத்துக் கதை கொண்ட இப்படத்தை, ரேனிகுண்டா படத்தின் இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்க தன்யா கதாநாயகியாக நடிக்கிறார்.

முதலில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடிப்பதாக இருந்தார். அதன்பின் லட்சுமி மேனனைத் தேர்வு செய்தனர் படக்குழு. படப்பிடிப்பின்போது லட்சுமி மேனனுக்குக் காலில் அடிபட்ட காரணத்தினால் ‘பலே வெள்ளையத் தேவா’, ’பிருந்தாவனம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த தன்யா தேர்வு செய்யப்பட்டார்.

பாபி சிம்ஹா, கிஷோர் போன்ற முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். திண்டுக்கல் மற்றும் தேனியைச் சுற்றியுள்ள ஊர்களில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தினர். படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, இமான் இசையமைக்க, ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கோடு மோஷன் போஸ்டரும் வெளியாகியது. மோஷன் போஸ்டரில் பின்னணியில் இமானின் பி.ஜி.எம் தெறிக்க விஜய் சேதுபதி ஜல்லிக்கட்டில் சீறி வரும் காளை மாட்டை வெறி கொண்டு அடக்குகிறார். ‘விக்ரம் வேதா’ படத்தைத் தொடர்ந்து கருப்பன் படமும் ரசிகர்களின் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் கருப்பன் படம் இன்று காலை 8 மணி முதல் திரையரங்குகளில் திரையிடப்பட இருந்தது. ஆனால் தயாரிப்பாளரிடம் இருந்து கிடைக்க வேண்டிய KDM லைசன்ஸ் கிடைக்கவில்லை என்பதால் பல இடங்களில் 8 மணி ஷோ நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கின்றனர். எல்லா பிரச்சனையும் முடிந்து கண்டிப்பாக 11.30 மணி ஷோ ஆரம்பமாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் விஜய் சேதுபதியை திரையில் பார்க்க காத்துகொண்டு இருக்கின்றனர். விஜய் சேதுபதி படம் என்றல் அனைவருக்கும் பிடிக்கும் இந்த கதையும் ஒரு மாறுபட்ட கதையாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது.