First Look, Teaser, Trailer, Preclips இந்த trendல இப்போ Motion Poster வந்துருக்கு… Motion Posterனா ஒன்னுமில்லைங்க சில அடுத்தடுத்த தொடர்புள்ள Poster இமேஜ்களை வரிசையாய் காட்டி பார்க்குறதுக்கு காட்சிகள் இயங்குவது போல பிரமையை உண்டாக்குறதுதான் இந்த Motion Poster.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘கருப்பன்’ங்குற அடுத்த படத்தோட Motion Poster வெளியாகிருக்கு. இதுல ஒரு காளையின் திமிலை விஜய் சேதுபதி பிடிக்கிற மாதிரி இருக்கு.
இந்த படம் ஜல்லிக்கட்டை அடிப்படையாய் கொண்டதாக இருக்கலாம்னு பரவலா பேசப்படுது. பொறுத்திருந்து பார்ப்போம்.

கொசுறு: இதே மாதிரி ஜல்லிக்கட்டு போராட்டத்தை அடிப்படையாக கொண்டு ‘ஜல்லிக்க்கட்டு’னு ஒரு படம் உருவாகிட்டு இருக்குங்க.