ரிசார்ட்டுக்கு வந்தது முதல் கருணாஸ் தான் அனைத்து எம்.எல்.ஏக்களையும் குஷி படுத்தினாராம், டான்ஸ் ஆட வைத்தார்.

அத்தனை ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து பெயரைக் கெடுத்துக் கொண்டார். ஒட்டு மொத்த தமிழ் மக்களும் கருணாஸ் மீது பயங்கரக் கோபத்தில் இருந்தார்கள்.

இந்த நிலையில் வாக்கெடுப்பு முடிந்து, எடப்பாடியார் முதல்வர் ஆகி ஒரு வாரம் ஆகப் போகிறது. அனால் உறுப்பினர்கள் மாணவர்கள், இளைஞர்கள் மக்கள் மீது உள்ள பயம் காரணமாக சொந்த ஊர்களுக்குப் போக நடுங்குகின்றனர்.

நடிகர் கருணாஸ் வெற்றி பெற்ற திருவாடனைத் தொகுதிக்குள் கருணாஸ் கால்வைக்க கூடாது என்று தீர்மானம் போட்டுள்ளனர்.

அப்படி உள்ளே கால் வைக்க முடியாது. எத்தனை போலீசைக் கூட்டி வந்தாலும் அது தான் நடக்கும்.

காவல் துறைக்கும் தெரியும். அவர்களும் தமிழர்கள் தானே! கருணாஸ் எங்கள் மக்களால் ஜெயித்து, கூவத்தூரில் பண்ணக் கூடாத வேலைகள் பண்ணி எங்கள் தொகுதியின் பெயரை களங்கப்படுத்தி விட்டார்.

பெரும் அவமானத்தில் கூனிக் குறுகி நிற்கிறோம் என்று புலம்புகின்றனர். பரிதாபமாக இருக்கிறது.