Politics | அரசியல்
கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.! தமிழக வரலாற்றை மாற்றி அமைத்தவர்
தமிழக வரலாற்றை புரட்டிப்போட்ட கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியொட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, ஏ.கே.அந்தோணி மற்றும் பல கட்சித் தலைவர்கள் மெரினா கடற்கரையில் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றி எழுதிய மூத்த தலைவரும் திமுக தலைவருமான கருணாநிதி உடல்நலக்குறைவால் கடந்த வருடம் இயற்கை எய்தினார். இவர் அரசியல் மட்டுமல்லாமல் பல துறைகளில் வல்லமை பெற்று விளங்கினார்.
மற்ற கட்சித் தலைவர்களுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய கலைஞர் கருணாநிதி இழப்பு தமிழகத்திற்கு பெரும் சோகம் தான். தற்போது அந்த கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.
இது மட்டுமல்லாமல் சினிமாவில் நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின் அரசியல் சாம்ராஜ்யத்தில் தனக்கும் ஒரு பங்கு இருப்பதாக கூறி களத்தில் இறங்கியுள்ளார். வாரிசுக்கான அரசியல் கட்சி இல்லை என்பதை மக்களுக்கு உணர்த்தவே என்றும் அவர் சவால் விடுத்துள்ளார்.
பல நல்ல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டுவந்த கலைஞர் கருணாநிதி இன்று வணங்கி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம். ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் அரசியல் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டதால் தமிழ்நாடு தற்போது மூன்றாவதாக ஒரு தலைவரை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது.
கவிஞர் வைரமுத்து இன்று கூறியது,
- கருணாநிதியின் கொள்கைகள் நினைவில் உள்ளவரை அவருக்கு மறைவு என்பது இல்லை
- கருணாநிதி மரிக்கவில்லை, தத்துவ உடம்பாக வாழும் வாழ்க்கை தொடங்கி இருக்கிறது
