kamal rajini_cinemapettai

பீனிக்ஸ் பறவையாக  உயிர்தெழுந்து வருகிறது கலைஞர் என்கிற அரசியல் ராஜதந்திரி. வரும் ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் கருணாநிதி  பிறந்த நாள்.

நினைவுகள் இழந்து இருக்கிறார். பழைய விஷயங்கள் எதுவும் நினைவில் இல்லை என்றெல்லாம் கருணாநிதி பற்றி செய்திகள் உலாவியது.

ஆனால் வீட்டில் ஓய்வில் இருந்தபடியே நிறைய பயிற்சிகள் மேற்கொண்டு நினைவுகளை மீட்டெடுக்கிறார் என்கிறார்கள்.

இந்தநிலையில்  சென்னையில், தனது 93 வது பிறந்தநாளான ஜூன் 3 ம் தேதி திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க வாய்ப்புள்ளதாக திமுக மூத்த நிர்வாகியான டி.கே.எஸ்., இளங்கோவன் கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  அஜித் நோ சொல்லி, விஜய்க்கு ஹிட் அடித்த படம் எது தெரியுமா?

இது தொடர்பாக அவர் கூறியதாவது , “கருணாநிதியின் உடல் நலம்  தேறி வருகிறது.

நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் வரும் ஜூன் 3 ம் தேதி மக்களையும், தொண்டர்களையும் சந்தித்து பேச வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ‘கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கருணாநிதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவருக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. எனவே தான், அவர் கட்சி தொண்டர்களை சந்திப்பதில்லை’ என்றும் கூறினார் .

அதிகம் படித்தவை:  கோஹ்லி காதலில் சடுகுடு விளையாடும் ஆப்கானிஸ்தான் வீரர்..!

டெய்ல் பீஸ்:

கலைஞர் மீண்டும் உற்சாகமாகவும்.. பழைய நினைவுகளை கொண்டு வரவும் அவர் கலந்து கொண்ட விழாக்கள், பொதுக்கூட்டங்கள், என பழைய பதிவுகளின்  வீடியோ போட்டுக் காட்டப்படுகிறதாம்.

சினிமா விழாக்களை ஆர்வத்துடன் பார்க்கிறார் என்கிறார்கள். வருகிற கலைஞர் பிறந்த நாளில் சூப்பர்ஸ்டார்களை அழைக்கலாமா என்று ஆலோசனைகள் நடக்கிறது என்கிறார்கள்.

அசத்துங்க..!!