கருணாகரன்

குறும் படங்களின் வாயிலாக சினிமாவில் நுழைந்தவர் கருணாகரன். இன்று வெள்ளித்திரையில் வெற்றி தடம் பதித்து விட்டார். கலகலப்பு , சூது கவ்வும், ஜிகர்தண்டா, யாமிருக்கப் பயமே, லிங்கா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.தற்பொழுது காமெடி என்று மட்டும் அல்லாமல் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

actor-karunakaran

தயாரிப்பாளர் சங்க போராட்டம்

க்யூப் கட்டணம், திரையரங்க டிக்கெட் எனப் பல கோரிக்கைகளுக்காக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 16 முதல் ஸ்ட்ரைக் அறிவித்து.பின்னர் உள்ளூர் ஷூட்டிங் தடை செய்யப்பட்டது. மேலும் வரும் மார்ச் 23 முதல் வெளிநாடு படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்கள். அதன் படி தமிழ் படங்களின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் என எல்லா வேலைகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் விஜய் 62, நாடோடிகள் 2 , கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களின் படப்பிடிப்பு மட்டும் சிறப்பு அனுமதி பெற்று நடந்து வருகிறது. சினிமா வட்டாரத்தில் இதற்கு சில எதிர்ப்பு குரல்கள் ஒலித்துவருகிறது.

அதிகம் படித்தவை:  குஜராத் பவுலர்களை வைத்து பேட்டிங் பழகிய நரைன் : பவுண்டரியில் புது சாதனை!

 

ட்விட்டரில் கருணாகரன்

இந்நிலையில் அன்பே ஆருயிரே படத்தின் எஸ். ஜே . சூர்யா போட்டோவை அப்லோட் செய்து விட்டு ” இருக்கு ஆனா இல்லை ” என்ற டீவீட்டை பதிவிட்டார்.

விஜய் படத்தின் படப்பிடிப்பு சென்னை விக்டோரியா மஹாலில் நடந்தது. இப்படத்தில் ஆந்திராவின் பிரபல் ஸ்டண்ட இயக்குனர்களாக திகழ்ந்து வரும் ராம், லக்‌ஷமண் (இரட்டையர்கள்) இணைந்துள்ளனர். இவர்கள் மிக பிஸியான ஆட்கள். இவர்கள் கால் – ஷீட் தேதி வீணாகிவிடக்கூடாது என்று தான் ஸ்பெஷல் பெர்மிசன் வாங்கி ஷூட்டிங் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளது.

அதிகம் படித்தவை:  விவசாயிகளுக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கும் ரூ.2 கோடி நன்கொடை... நெகிழச் செய்யும் மூத்த நடிகர்
Ram-Laxman

இந்நிலையில் கருணாகரன், ‘தமிழன்னு சொன்னா திமிர் ஏறும்’ என்பது உண்மையா? இல்லை வெறும் பாட்டுக்கு மட்டும்தானா? என்று மெர்சல் படத்தின் வரிகளை தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

கருணாகரனின் இந்த ட்வீட்டுக்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.