குறும் படங்களின் வாயிலாக  சினிமாவில் நுழைந்தவர் கருணாகரன். இன்று வெள்ளித்திரையில் வெற்றி தடம் பதித்து விட்டார். கலகலப்பு , சூது கவ்வும், ஜிகர்தண்டா, யாமிருக்கப் பயமே, லிங்கா  உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். காமெடி என்று மட்டும் அல்லாமல் பலதரப்பட்ட வேடங்களில் நடித்து வருகிறார்.

karunakaran

ஜிகர்தண்டா

2014­-ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படத்தில் ஹீரோ சித்தார்த்தின் நண்பனாக அவருடன் வளம் வந்தார் கருணாகரன். மேலும் அசால்ட் சேது பாபி சிம்ஹா  பற்றிய விவரங்களையும் இவர் தான் பகிர்வார். கதை அம்சத்துடன் இணைந்த கதாபாத்திரம் இவருடையது.

Jigarthanda

பாலிவுட் ரீ மேக்

இப்படத்தின் ரீமேக் உரிமையை  அஜய் தேவ்கன் வாங்கியுள்ளார். இப்படத்தை நிஷிகாந்த் காமத் இயக்குகிறார். அசால்ட் சேதுவாக “சஞ்சய் தத்” லட்சுமிமேனன் ரோலில் “தமன்னா” நடிக்கின்றனர். சித்தார்த் வேடத்தில் “பாரான் அக்தர்” நடிப்பதாக இருந்தது. எனினும் அவர் விலகி விட்டார்.

jigarthanda remake

இந்நிலையில் தமிழில் நடித்த அதே கதாபாத்திரத்தில் அதாவது ஹீரோவின் நண்பனாக ஹிந்தியிலும் கருணாகரனே நடிக்க அணுகியிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை நடைபெற்று வருகின்றது.   விரைவில் அதிகார பூர்வ தகவலை வெளிவருமாம். கருணாகரன் ஹிந்தியில் நடிக்கவிருக்கும் முதல் படம் இதுதான்.