fbpx
Connect with us

Cinemapettai

கருணாகரனை வெளுத்து வாங்கிய தளபதி ரசிகர்கள்..! முடிவுக்கு வந்த சர்ச்சை பேச்சு

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கருணாகரனை வெளுத்து வாங்கிய தளபதி ரசிகர்கள்..! முடிவுக்கு வந்த சர்ச்சை பேச்சு

நகைச்சுவை நடிகரான கருணாகரன் மற்றும் தளபதி ரசிகர்கள் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு வந்தது, அது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

கருணாகரன் ரசிகர்களை வெறுப்பேற்றும் விதமாக குட்டிக்கதை என்பது அரசியல்வாதிகளுக்கு மட்டும் தானா இல்லை நடிகர்களுக்குமா என்று விஜய் தாக்கி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அது மட்டுமல்லாமல் ‘தகாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லுங்கள் நண்பா’ என்று ட்வீட் செய்துள்ளார். இதனால் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் தொடர்ச்சியாக பல கருத்துக்களை தெரிவித்து மோதினார்கள்.

கருணாகரனின் தொலைபேசி எண்ணை சமுக வலைதளங்கில் பகிர்ந்து பலர் அவரை தொலைபேசியில் திட்டி தீர்த்தார்கள்.

இந்த நிலையில் நேற்று தனது ஓட்டுப்பதிவை முடித்துவிட்ட கருணாகரன் செல்போனில் செல்பி மூலம் சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

அதுமட்டுமல்லாமல் சமூகவலைத்தளங்களில் நான் பயன்படுத்தும் எந்த ஒரு வார்த்தையாவது யாராவது புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கருணாகரன் தெரிவித்துள்ளார்.

இது விஜய் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top