Connect with us
boomerang-movie

விஜய்க்கு பின் கருணாகரன்- தேவா கூறுவது என்ன?

News | செய்திகள்

விஜய்க்கு பின் கருணாகரன்- தேவா கூறுவது என்ன?

deva_karunakaranசமீபத்தில் வெளியான விஜய்யின் ‘தெறி’ படத்தில் இடம்பெற்ற ‘ஜித்து ஜில்லாடி’ பாடலை அட்டகாசமாக பாடிய தேனிசைத் தென்றல் தேவா, அடுத்து கருணாகரனுக்காக ஒரு குத்துப்பாடலை பாடியுள்ளார். இந்த பாடலில் தேவாவுடன் இணைந்து கானாபாலா மற்றும் அந்தோணி தாசன் ஆகியோர்களும் பாடியுள்ளதால் இந்த பாடல் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேனியல் பாலாஜி, கருணாகரன், ஜனனி ஐயர், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் ரமேஷ் ராஜா இயக்குகிறார். அஸ்வின் என்ற புதுமுகம் இந்த படத்திற்கு இசையமைக்கின்றார்.

‘அண்ணன்தாண்டா டான்’ என்று தொடங்கும் இந்த குத்துப்பாடல் கருணாகரனுக்காக பாடப்பட்டது என்றும் இந்த படத்தில் கருணாகரன் நடிக்கும் கேரக்டர் வடிவேலுவின் ‘கைப்புள்ள’ கேரக்டரை ஒட்டி அமைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top