நம்ம தல நடிக்கும் விவேகம் படத்தை பற்றி தினம் தினம் ஒரு சுவாரஸ்யமான தகவல் வந்துட்டு இருக்குங்க. இன்னைக்கு என்ன தகவல்னா நம்ம அஜித் இவ்வளவு நல்லவரா என்று கலங்கி போய்ட்டாராம் விவேகம் படத்தில் நடித்த கருணா என்னும் கருணாகரன்.
விவேகம் படத்துல ராயல் லுக்ல நம்ம தலயோட போஸ்டர் நிறைய வந்துச்சுங்க. அதே மாதிரி ஒரு ராயல் லுக்ல முதல் முறையா காமெடி நடிகர் கருணாவோட புகைப்படமும் வெளிவந்துருக்கு.

ajithபடத்துல அஜித் கூட வேலை பார்க்கும் காவல் அதிகாரியாய் கருணா வருகிறார். படத்துல ஒரு காட்சில பெரிய வசனத்தை தொடர்ந்து பேசுற மாதிரி ஒரு கட்டம் வருதாம்ங்க. நம்ம கருணாவும் பேசிருக்காரு ஆனா இவ்வளவு பெரிய வசனத்தை நம்ம தலைக்கு முன்னாடி பேசுறதுக்கு ரொம்பவே பதட்டப்பட்டாராம் கருணா.

இதனால் பல டேக்குகள் வாங்கியும் கருணாவிற்கு வசனம் பேச வரவில்லையாம். உடனே ஷூட்டிங்கை நிறுத்த சொன்ன தல எல்லாரையும் போக சொல்லிவிட்டு கருணாவை தனியே அழைத்து எதுக்கும் பயப்படாத தைரியமா நடி நான் பக்கத்துல இருக்கேன், உனக்கு பயமா இருந்தால் வா நீயும் நானும் தனியா ஒத்திகை பார்த்துக்கலாம்னு சொல்லி அதே மாதிரி கருணாவுடன் தனியே ஒத்திகையும் பார்துருக்காராம் தல.

ajith58ஒத்திகை முடிந்தவுடன் கருணாவை பாராட்டி தைரியம் கொடுத்தாராம். தல கொடுத்த பாரட்டுளையும் தைரியத்துலையும் அனாயஸ்யமா அந்த வசனத்தை பேசி முடித்தாராம் கருணா. அஜித்தின் பெருந்தன்மையை நான் புரிந்துகொள்ள எனக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார் கருணா.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: தலனாலே தன்னடக்கம், பெருந்தன்மைதானே.