கடன் கொடுத்த  பைனான்சியர் அன்புசெழியன் மிரட்டியதன் காரணமாக சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அசோக்குமார். இந்த சம்பவம் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அன்புச்செழியனுக்கு சினிமா துறையின் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

“சினிமா பைனான்சியர் அன்புச்செழியனை அனைவரும் சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது’ என்று நடிகர், இசையமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி அறிக்கை வெளியிட்டார்.

பலரும் அன்புசெழியனுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிலையில், விஜய் ஆண்டனி ஆதரவாக அறிக்கை  வெளியிட  சர்ச்சை உண்டானது.

கரு.பழனியப்பன்

மனதில் பட்டதை  வெளிப்படையாக பேசும் இயக்குநர் கரு.பழனியப்பன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சில நாட்களுக்கு முன் மருத்துவ படிப்பு கிடைக்காமல் தற்கொலை செய்த அனிதா வின் இரங்கல் கூட்டத்தில் பேசிய கரு.பழனியப்பன் ‘மருத்துவர் ஆகமுடியவில்லை என்றால் என்ன, வேறு துறையில் சாதிக்கலாம்.வேறு ஏதாவது படிக்கலாமே என்று ஒருவன் கூறுவான், அப்படி ஆறுதல் கூறுபவனை துரத்தி, துரத்தி அடி, அவன் தான் மிகப்பெரிய விஷம். அனிதா படித்திருந்தால் இன்று அந்த ஊரே அவளை சாமியாக வழிப்பட்டு, அடுத்து பல மருத்துவர்கள் உருவாகியிருப்பார்கள், அப்படிப்பட்ட சாமிய கொன்றுவிட்டீர்களே’ என்றும் உணர்ச்சி பொங்க பேசினார் கரு. பழனியப்பன்