கேரளா மாநிலத்தில் முதியோருக்கான எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. அதில் பங்குகொண்ட 96 வயது மூதாட்டியான கார்த்தியானி அம்மாள் 98/100 மார்க் எடுத்து அசத்தியுள்ளார். இளமை காலத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு அம்மாநில அரசு எழுத்தறிவு இயக்கத்தை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 42 ஆயிரத்து 933 பேர் தேர்ச்சிபெற்றனர்.

karthiyayini-ammal-exam

தேர்வு எழுதிய கார்த்தியானி அம்மாள் இந்திய அளவில் செய்தியானார். அன்றைய வாய்மொழித் தேர்வில் அவர் முதல் மதிப்பெண்ணும் பெற்றிருந்தார்.

இந்நிலையில் எழுத்துத்தேர்வு முடிவு வெளியாகியுள்ளது. இதில் அவர் 100-க்கு 98 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். அக்‌ஷரலக்‌ஷம் கல்வி இயக்கத்தில் சேர்ந்து பயில்பவர்களுக்கு வாசித்தல், எழுதுதல், கணிதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆண்டுத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.