Tamil Cinema News | சினிமா செய்திகள்
பீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…

பீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் வைத்த கோரிக்கை…
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், சூப்பர்ஸ்டாரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு சண்டை காட்சிகளை அமைக்கும்படி பீட்டர் ஹெய்னிடம் கோரிக்கை வைத்து இருக்கிறாராம்.

karthik
ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் காலா. பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கி இருந்தார். தாராவி பகுதியின் பிரச்சனைகளை இப்படம் காட்சிப்படுத்தி இருந்த விதத்தால், படம் மாஸ் ஹிட் அடித்தது. ரஜினி மட்டுமல்லாமல் அவர் காதலி ஹீமா குரோஷி, மனைவி ஈஸ்வரி ராவ், மகன் திலீபன், நண்பன் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் பக்காவான நடிப்பை வெளிப்படுத்தினர். கபாலி தோல்வியால் கவலையில் இருந்த சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் காலா வெற்றியை வெகுவாக கொண்டாடி வருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கிராபிக்ஸ் பணிகள் முடிந்து 2.ஓ படம் வெளிவரும். அதையடுத்து, ரஜினிகாந்த் அரசியலில் இறங்கி இருப்பதால் படத்தில் நடிக்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால், இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜுக்கு தனது அடுத்த படத்தின் வாய்ப்பை கொடுத்தார்.
வெகுகாலத்திற்கு பிறகு தயாரிப்புக்கு திரும்பி இருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முதல்முறையாக ரஜினிக்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க இருக்கிறார். கோலிவுட்டில் மாஸ் காட்டி வரும் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்க இருக்கிறார். அவருக்கு வில்லன் கதாபாத்திரம் கொடுத்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும், பாபி சிம்ஹா, சனத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் காலா ரீலிஸான அன்று இமயமலையில் அமைந்துள்ள டார்ஜிலிங் பகுதியில் தொடங்கியது. அங்கு ஒரு கல்லூரியில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட இருப்பதால், ரஜினி இப்படத்தில் பேராசிரியராக நடிக்கலாம் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தின் சண்டை இயக்குனராக பீட்டர் ஹெய்ன் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே ரஜினியின் எந்திரன், சிவாஜி, கோச்சடையன் படங்களுக்கு சண்டை அமைத்த பீட்டர், இப்படத்தின் மூலம் ரஜினிக்கு நான்காவது முறையாக சண்டை காட்சிகளை இயக்க இருக்கிறார். ரஜினி படம் என்றாலே சண்டைகள் மாஸாக இருக்கும். அதை கடைசியில் வெளியான காலா படமும் நிரூபித்து விட்டது. இப்படத்தில் சண்டைகளை அதிரடியாக எதிர்பார்க்கலாம். இருந்தும், சூப்பர்ஸ்டாரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அக்காட்சிகளை அமைக்க பீட்டர் ஹெய்னிடம் கார்த்திக் சுப்புராஜ் கோரிக்கை வைத்து இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
