Connect with us

Cinemapettai

ஜோதிகா, சத்யராஜ் vs கார்த்தி.. தம்பி திரைவிமர்சனம்! மேட்டுக்குடி வெர்ஷன் 2.0

Reviews | விமர்சனங்கள்

ஜோதிகா, சத்யராஜ் vs கார்த்தி.. தம்பி திரைவிமர்சனம்! மேட்டுக்குடி வெர்ஷன் 2.0

மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர் ஜீது ஜோசப். தனது சூப்பர் ஹிட் படத்தை கமல் வைத்து இயக்கி பாபநாசம் வாயிலாக தமிழில் என்ட்ரி கொடுத்தார். இவர் நேரடியாக தமிழில் எடுத்துள்ள திரில்லர் படமே தம்பி. வாங்க தம்பி பற்றி பார்ப்போம் ..

கதை – MLA சத்யராஜ் – சீதா தம்பதியின் மகள் ஜோதிகா. 15 வருடங்களுக்கு முன் காணாமல் சென்றுவிட்டான் மகன். இதனால், அந்தக் குடும்பமே சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது. கோவாவில் பெரிய 420 கார்த்தி. ஆனால் கோவா போலீஸ் இளவரசு வாயிலாக தொலைந்த மகன் சரவணனாக சத்தியராஜ் ஊரில் நுழைகிறார்.

டூபாக்கூர் கார்த்தியை கொலை செய்ய நினைப்பது யார், ஒரிஜினல் சரவணன் நிலை என்ன, தம்பியின் பிரிவால் திருமணமே செய்து கொள்ளாமல் ஜோதிகா வாழ்வதன் காரணம் என்ன, என பல மர்ம முடிச்சுகளை கார்த்தி அவிழ்ப்பது தான் படம்.

சினிமாபேட்டை அலசல் கார்த்திக் – நக்மா நடிப்பில் வெளியான மேட்டுக்குடி மற்றும் இப்படத்தின் கதையும் ஒன்று தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் எமோஷன், சஸ்பென்ஸ், திரில்லர் அம்சங்களை சேர்த்து படத்தை இன்றைய தேதிக்கு ரசிக்கும் படி வைத்துள்ளார் இயக்குனர்.  மாஸ்டர் அஷ்வந்த், செளகார் ஜானகி சம்பந்தமான காட்சிகள் படத்திற்கு பிளஸ். கோவிந்த் வசந்தா மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜசேகர் கூடுதல் பலம்.

420 ஹீரோ மனம் மாறுவது. ஹீரோவை சுத்தி வரும் நிகிலா விமல். கூடவே உள்ள வில்லன். மலைக்கிராமத்தில் ரிசார்ட் காட்டும் பிரச்சனை என நாம் பல வருடங்களாக பார்த்த டெம்ப்லேட் தான் இப்படத்தில். லாஜிக் மீறல்கள் அதிகம்; கூடுதல் கவனம்  செலுத்தி இருக்கலாம் இயக்குனர்.  பாபநாசம் படத்தை கிளைமாக்சில் இயக்குனர் வைத்து விட்டாரோ என்றே தோன்றுகிறது.

சினிமாபேட்டை வெர்டிக்ட் துளியும் போர் அடிக்காமல், பாப் கார்ன் கொரித்துக்கொண்டே குடும்பத்துடன் பொழுதை கழிக்க ஏற்ற படமே இந்த தம்பி.

சினிமாபேட்டை ரேட்டிங் 2 .75 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top