fbpx
Connect with us

அண்ணனுக்காக விட்டு கொடுத்த கார்த்தி- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

suriya-karthi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அண்ணனுக்காக விட்டு கொடுத்த கார்த்தி- தம்பி உடையான் படைக்கு அஞ்சான்

சிவகுமாரின் வாரிசுகள். சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தனக்கென்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மார்க்கெட்டை வைத்துள்ளனர். இந்த இருவரும் இணைந்த உன்னடிக்கும் படம் வராதா எனவும் பலர் ஏங்குவது உண்டு.

சுல்தான்- கார்த்தி 19 படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இரண்டாவது படம். கார்த்தியுடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். காமெடிக்கு யோகி பாபு. இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை. ஆன்டனி ரூபென் எடிட்டிங். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று காலை 10 மணிக்கு வெளியாவதாக இருந்தது.

karthi-suriya

karthi-suriya

சூரரை போற்று –  ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தும் கதை. சுதா கொங்கரா தலைமையில் ரெடியாகி அமேசான் பரைம் ரிலீஸுக்கு காத்திருக்கும் படம்.நாயகியாக அபர்ணா பாலமுரளி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ். இன்று காலை இப்படத்தின் ட்ரைலர் 10 மணிக்கு வெளியானது.

நேரடியாக மோதும் அண்ணன்., தம்பி என சமூகவலைத்தளங்களில் அனைவரும் பேசிவந்தனர். இந்நிலையில் கார்த்தியின் சுல்தான் முதல் லுக் போஸ்டர் மாலை 3.30 மணிக்கு வெளியாகிறது என தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

sulthan flp

ட்விட்டரில் கூட நேரடி மோதல் வேண்டாமே என நினைப்பது சூப்பர் தான் போங்க.

Continue Reading
To Top