Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தரமான சம்பவத்துக்கு தயாராகும் கார்த்தி- சுல்தான் பர்ஸ்ட் லுக் வெளியானது

சுல்தான்- கார்த்தி 19 படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிக்கின்றனர். சிவகார்த்திகேயனின் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இரண்டாவது படம். கார்த்தியுடன் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தானா நடிக்கிறார். காமெடிக்கு யோகி பாபு. இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு. விவேக் மற்றும் மெர்வின் இசை. ஆன்டனி ரூபென் எடிட்டிங்.

sultan-cinemapettai

sultan-cinemapettai

இப்படத்தின் ஷூட்டிங் திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கியது. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சின்ன சின்ன காட்சிகள் மட்டுமே பாக்கியிருந்தது. ஆனால் இதன் படப்பிடிப்பு கோரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

சமீபத்தில் இதன் படப்பிடிப்பை சென்னையில் படமாக்கி ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகளைப் படக்குழு ஆரம்பித்துள்ளனர்.

karthi in and as sultan

இன்று விஜயதசமி ஸ்பெஷலாக  முதல் லுக் வெளியானது.

Continue Reading
To Top