ஒரு மைய்ய மெசே ஜை எடுத்துக்கொண்டு காதல், காமெடி, ஆக்ஷன், கமெர்ஷியல் மசாலா என கலந்துகட்டி கொடுப்பதில் வித்தகர் தான் பி எஸ் மித்திரன். இரும்பு திரை (சைபர் க்ரைம்), ஹீரோ (கல்வியில் உள்ள குறைகள்) வரிசையில் எடுத்துள்ள படம் தான் சர்தார் (ரகசிய உளவாளி). இசை ஜி வி பிரகாஷ், ஒளிப்பதிவு ஜார்ஜ் வில்லியம்ஸ், எடிட்டிங் ரூபென்.
கதை – பப்லிசிட்டி போலீசாக சுற்றிவருகிறார் ஹீரோ கார்த்தி. வக்கீல் காதலியாக ராசி கண்ணா. ஒரு கட்டத்தில் தண்ணீர் வாயிலாக நடக்கும் அரசியலை பற்றி தெரிந்துகொள்கிறார். பிளாஷ்பேக்கில் ரகசிய உளவாளியாக இருக்கும் அப்பா (சர்தார்) கார்த்திக்கு என்ன துரோகம் நிகழ்கிறது; அதற்கு காரணம் யார் என்பதனை பார்க்கமுடிகிறது. இரண்டுக்கும் காரணம் ஒருவனே, அவனை அப்பா -மகன் எப்படி அழிக்கின்றனர், நம் நாட்டு மக்களை சதியில் இருந்து காப்பாற்றுவதுடன் முடிகிறது படம்.
சினிமாபேட்டை அலசல்– போலீஸ் கார்த்தி அப்படியே நமக்கு சிறுத்தை படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறார். நக்கல், டயமிங் காமெடி என சூப்பர். சர்தார் கார்த்தியின் காட்சிகள் நமக்கு புதிய பீல் கொடுக்கிறது. அட நம்ம ஊரு ஜேம்ஸ் பாண்ட் என சொல்லவைக்கிறது. பல கெட் அப்புகள் கார்த்திக்கு கனகச்சிதமாக பொருந்துகிறது.
சினிமாபேட்டை வெர்டிக்ட்– பண்டிகை நாளில் கண்டு ரசிக்க ஏற்ற பக்கா கமெர்ஷியல் பேக்கேஜ் இப்படம். அனைத்து சென்டர் ரசிகர்களையும் கட்டாயம் இப்படம் கவரும். பேன் இந்தியா தரத்தில் ஒரு தமிழ் படம்.

இத்துடன் சிவகர்த்திகேயனின் பிரின்ஸ் படமும் வெளிவந்தது, ஆனால் சர்தார் அளவுக்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை என்றுதான் கூறப்படுகிறது. வசூல் ரீதியாக தற்போது சர்தார் படம் முன்னிலையில் உள்ளது.
சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5