Reviews | விமர்சனங்கள்
கார்த்தியின் ஆக்ஷன் திரில்லர் கைதி திரை விமர்சனம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளி ரேஸில் பிகில் விஜய்யுடன் நேரடியாக மோதும் படமே கைதி. ஹீரோயின், பாடல்கள் கிடையாது. முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் என்பதனை தெளிவாக சொல்லி தான் மார்க்கெட்டிங் செய்தனர். வாங்க படம் எப்படி என பார்ப்போம் ….
கைதி – 840 கோடி மதிப்பிலான போதைப்பொருளை நரேன் தலைமையில் பிடிக்கின்றனர். 6 நபர்களை சிறையில் அடைத்துவிட்டு, கமிஷனர் அலுவலக சுரங்கத்தில் அந்த சரக்கை பாதுகாப்பாக வைக்கின்றனர். கமிஷ்னரை சந்திக்க செல்கின்றனர். முகத்தையே இதுவரை கண்டுபிடிக்க முடியாத அந்த க்ரூப்பின் தலைவனை வெளியே வரவைக்க இந்த சூழலை பயன் படுத்துகின்றனர். . அங்கு கமிஷனர் பங்களாவில் அணைத்து உயர் அதிகாரிகளுக்கும் சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கு சரக்கு பாட்டிலில் போதை மறந்து கலக்கப்பட்ட மொத்த போலீசும் சரிகிறது. நரேன் மட்டும் என்ன செய்வதென அறியாமல் நிற்கிறார்.
புழல் ஜெயிலில் இருந்து ரிலீசான கார்த்தி, சந்தேகத்தின் பெயரில் ஜீப்பில் ஏற்றப்படுகிறான். தன் மகளை அடுத்த நாள் முதல் முறையாக பார்க்கும் பூரிப்பில் உள்ளான் அவன். மயக்கத்தில் உள்ள 30 போலீசையும் ஹாஸ்பிடலில் சேர்க்க வேண்டும், பின்னர் சரக்கு உள்ள இடத்திற்கு நரேனை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் அவன் லாரியை ஸ்டார்ட் செய்ய அதன் பின் நடக்கும் போராட்டமே மீதி கதை.
பிளஸ் – கார்த்தி, டெக்னிக்கல் டீம் (கலை, இசை, ஒளிப்பதிவு, எடிட்டிங்), இயக்குனரின் திட்டமிடல், ஆக்ஷன் காட்சிகள்
மைனஸ் – பல இடங்களில் லாஜிக் மீறல், டெர்மினேட்டர் பட பாணி கிளைமாக்ஸ் துப்பாக்கி சுடுதல்
சினிமாபேட்டை அலசல் – ஆக்ஷன் படம் என தனியே நிறுத்திவிடாமல் அங்கு காமெடிக்கு காமாட்சி கேட்டரிங், எமோஷனுக்கு மகளின் காட்சிகள். விறுவிறுப்பை கூட்ட கல்லூரி மாணவர்கள், ட்ரான்ஸபரில் வந்த புதிய போலீஸ் என பல விஷயங்களை தன் திரைக்கதையில் புகுத்தி அசத்தியுள்ளார் இயக்குனர். எனினும் அண்டர் கவர் போலீஸ், ஜுஜுபி ஆட்களுடன் மெயின் வில்லன் சிக்குவது, அரத பழசான கார்த்தியின் பிளாஷ் பேக் என சில பார்த்து சலித்த விஷயமும் இருக்கிறது.
எனினும் இரவு நேரத்தில் மட்டும் ஷூட்டிங், லாரியை கா ட்டுப்குதியில் விரட்டும் 50 – 60 ஆட்கள் என படத்தில் உள்ள சில பல குறைகளை மேக்கிங்கில் நம்மை மறக்க வைத்துவிட்டனர் இந்த டீம்.
சினிமாபேட்டை வெர்டிக்ட் – ஆக்ஷன் படம் தானே என நினைத்து செல்பவர்கள் ஏமாந்தே போவீர்கள். அணைத்து அம்சங்களும் உள்ள கமெர்ஷியல் கலவை தான் இந்த கைதி. பேமிலி ஆடியன்ஸும் பார்க்கும் வகையில் தான் உள்ளான் இந்த கைதி.
சினிமாபேட்டை ஒன் லயன் – இந்த கைதி ரிலீஸாகி ஹிட் அடித்துவிட்டான்.
சினிமாபேட்டை ரேட்டிங் – 3 / 5
