fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

கார்த்திக்கை செம்பருத்தி சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கிய ஜீ தமிழ்.. அடுத்த ஹீரோவாக வரும் விஜய் டிவி பிரபலம்!

sembaruthi

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கார்த்திக்கை செம்பருத்தி சீரியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கிய ஜீ தமிழ்.. அடுத்த ஹீரோவாக வரும் விஜய் டிவி பிரபலம்!

தற்போதெல்லாம் சினிமா நடிகர்களை விட சீரியல் நடிகர்களுக்கு தான் மவுசு அதிகம். மேலும் ஒவ்வொரு சேனலும் தங்களது சேனலை முன்னேற்றுவதற்கு முக்கியமான ஆயுதமாக சீரியல்களை பயன்படுத்தி வருகின்றன.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  தொடர் தான் ‘செம்பருத்தி’. இந்தத் தொடரில் நடிகை பிரியாராமன் அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்திலும், அவரது மூத்த மகன் ஆதி கேரக்டரில் கார்த்திக்கும் நடித்து வருகின்றனர்.

மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் இன்று வரை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் ஆதி- பார்வதியின் ரொமான்ஸ் தான்.

இந்த நிலையில் செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் ராஜ் விலகப்போவதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல், ஜீதமிழ் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இந்த செய்தியை உறுதியாகியுள்ளது.

அதாவது சமீபத்தில் இந்த தொடரில் நடித்திருந்த ஜனனி அசோக் திடீரென சீரியல் இருந்து நீக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து, தொடரின் முக்கிய நாயகனாக நடித்து வந்த கார்த்திக் விலக இருப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்தன.

ஏனென்றால், சில நாட்களாக ஒளிபரப்பான எபிசோடுகளில் கார்த்திக் ராஜ் இல்லாமல், துணை கதாபாத்திரங்களை இருந்துவந்தன. இந்த நிலையில் கார்த்திக் செம்பருத்தி சீரியலில் இருந்து வெளியேறப் போவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும் அந்த அறிவிப்பில், நடிகர் கார்த்திக் ராஜுக்கு நன்றியைத் தெரிவித்தும், அவருக்கு பதிலாக வேறு ஒருவர் செம்பருத்தி சீரியலில் நடிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர் ஜீ-தமிழ் நிறுவனத்தினர்.

எனவே, இவ்வாறு  மக்களின் ஃபேவரிட் தொடரிலிருந்து கதாநாயகன் விலகி இருப்பது, பலரைஅதிர்ச்சியடையச் செய்துள்ளது. மேலும் இந்தச் செய்தியைக் கேட்ட ஆதியின் ரசிகர்கள் அனைவரும் சோகக் கடலில் மூழ்கி உள்ளனராம்.

எனினும் செம்பருத்தி சீரியலில் கார்த்திக்குக்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பை ரசிகர்கள் எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கியிருக்கும் அஸ்வின், கார்த்திக் வேடத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top