fbpx
Connect with us

Cinemapettai

காளிங்கராயன் கால்வாயில்.. என் மகளின் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு.. கார்த்தி!

Tamil Nadu | தமிழ் நாடு

காளிங்கராயன் கால்வாயில்.. என் மகளின் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு.. கார்த்தி!

நடிகர் கார்த்தியின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிராமம் ஆகும். இவரது தந்தை சிவக்குமார் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் செட்டில் ஆனார். அவரது பிள்ளைகளான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் மிக உயரத்தில் இருக்கிறார்கள்.

சூர்யா மும்பையைச் சேர்ந்த ஜோதிகாவை திருமணம் செய்தார். கார்த்தி தனது கொங்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்தார். அவர் திருமணம் செய்த ஊர் ஈரோடு அருகே உள்ள ‘காளிங்கராயன் பகுதியாகும்.

இவர் ஈரோடு அருகே காளிங்கராயன் கால்வாயில் பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஆற்றில் விடும் விழாவிற்கு தன் குடும்பத்துடன் சென்றார் நடிகர் கார்த்தி. அந்த கால்வாயை மீட்டு மீண்டும் அனைவரும் உபயோகிக்கும் வகையில் மீட்டெடுக்க இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்து கார்த்தி பேசியது அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது.

அப்போது கார்த்தி பேசுகையில். “738 வருசத்துக்கு முன்னாடி காளிங்கராயன் என்பவர் மக்களுக்காக இந்த கால்வாயை கட்டினார். அவர் பெயரையே இந்த கால்வாய்க்கு சூட்டியிருக்காங்க.

தன்னோட சுய நலத்திற்காக தான் இதை கட்டினார்கள் என்று யாரும் கூறிவிட கூடாது என்பதற்காக அந்த கால்வாயிலிருந்து தண்ணீர் கூட அருந்தாமல் குடும்பத்துடன் ஊரை விட்டு சென்றார். அன்று முதல் இன்று வரை நாம் தான் இந்த நீரை அனுபவிச்சுகிட்டு வர்றோம்.

இத்தனை ஆண்டு காலமாக நீர் அனைவருக்கும் பயன்படும் விதமாக இருந்துச்சு. ஆனால், கடந்த 40 ஆண்டு காலமாக இந்த நீரைப் பயன்படுத்த இயலாமல் இருக்கிறது. அதற்கு காரணம் இப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளால் தான் காரணம்.

கழிவுகள் கலப்பதை தடுக்க இளைஞர்கள் தான் மாற்றத்தை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சென்று அவர்களுடைய பொருட்செலவில் கழிவு நீரை சுத்தப்படுத்தி பின்பு கால்வாயில் கலக்க செய்யுமாறு வலியுறுத்தி கடிதம் கொடுக்க வேண்டும்.

தனிமனிதனாக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற காளிங்கராயனின் சிறந்த செயல் அழியாதவாறு பாதுகாக்க வேண்டும். நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கு நாம் வழி முறை செய்ய வேண்டும். நோய் இல்லாமல் இருப்பதும் நோய் இல்லாமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை. அதை உணர்ந்து இளைஞர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட்டாக வேண்டும்.

மேலும், நான் சிறுவயதில் ஊருக்கு செல்லும்போதும் எங்கள் ஊரில் இதுபோன்ற நீரை நான் கண்டதில்லை. திருமணம் முடிந்து முதல் முறையாக இந்த ஊருக்கு வந்தபோது தண்ணீரைப் பார்த்து நான் பொறாமை அடைந்தேன்.

என் வாழ்நாளில் இன்று தான் முதல் முறையாக முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறேன். என் மகளும் ஆற்றில் விட்டது அவளுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும். மக்களுக்காக இந்த கால்வாயை நிச்சயம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top