Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித், விஜய் பட நடிகை ரஜினிக்கு ஜோடியா.?

மிக வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ்ம் ஒருவர் இவர் குறைந்த படத்திலேயே முன்னணி நடிகர்களுடன் இணைய ஆரம்பித்துவிட்டார் இவர் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது என் என்றால் இவரின் படம் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
இவர் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்துள்ளார், இவர் இவ்வளவு குறுகிய நாட்களில் ரஜினியுடன் இணைவது அனைவருக்கும் பெரிய விஷயம் தான், இந்த நிலையில் படத்தின் படபிடிப்பு ஏற்க்கனவே மேற்கு வங்காளம் மாநிலத்தில் டார்ஜிலிங்கில் தொடங்கிவிட்டதாகவும் முதல் கட்ட படபிடிப்பு முடிந்து விட்டதாகவும் தெரிகிறது.
படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார் இந்த நிலையில் ரஜினிக்கு ஜோடியாக இடுப்பழகி சிம்ப்ரன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது இவர் இதற்க்கு முன் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Simran
