பல நாட்களாக நடைபெற்ற தயாரிப்பாளர்களின் ஸ்ட்ரைக் நேற்று முடிவுக்கு வந்தது. பேச்சு வார்த்தையில் சுமூகமாக முடிவு எடுக்கபட்டதால் ஸ்ட்ரைக் வாபஸ் பெறப்பட்டதாக அறிவித்தனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்தார் விஷால். ஓன்று இனி படங்களுக்கு ஏற்ப டிக்கெட் கட்டணம் நிர்ணயக்கபடும், மற்றொன்று ஜூன் 1 முதல் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் புக் செய்ய புதிய இணைய தளம் அறிமுகபடுத்தப்படும்.

தற்பொழுது ஸ்ட்ரைக் முடிவுக்கு வந்துள்ளதால் வரும் வெள்ளிகிழமை புதிய படம் ரிலீஸ் ஆகும் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய மெர்குரி படத்தை ஏப்ரல் 20 தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்போவதாக தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

MERCURY – Karthik Subburaj – Prabhu Deva

மெர்குரி

பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், இந்துஜா, ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடித்துள்ளார்கள். இது ஊமைப் படம், குறிப்பிட்ட மொழி என கிடையாது, எனவே வழிக்கம் தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாட்டில் இப்படம் ஏப்ரல் 13 ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.