கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரேஷன்ஸ் தயாரிப்பில் ரத்தின குமார் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் முதல் படம் மேயாத மான். வைபவ், விவேக் பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர்,இந்துஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரதீப் இதன் இசையமைப்பாளர்கள்.

Priya Bhavani Shankar @ Meyatha Maan Audio Release at Loyola College Photos

தீபாவளியன்று மிகவும் குறைந்த திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது இப்படம்,
அதற்கு ஒரே காரணம் மெர்சல் தான். இப்படம் மெர்சல் பிவேர் சற்று ஓய்ந்ததும் இப்பொழுது பிக்-அப் ஆகியுள்ளது.

மேலும் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை தமிழ் நாடு தவிர வேறு எங்கும் ரிலீஸ் செய்யவில்லை. திருட்டு தனமாக படம் இணையத்தில் வருவதை தவிர்க்கவே அவர் அவ்வாறு செய்தார். நேற்று முதல் படம் பிற மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

ரசிகர்கள், செலிபிரிட்டிகள், பத்திரிக்கையாளர்கள் என்று பலரும் இப்படத்தை பார்த்த பின் நல்ல விதமாக கூறியதால் தற்ப்பொழுது ஷோகளின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தை பல விதங்களில் மார்க்கெட்டிங் செய்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

தற்பொழுது ஹாட் டாபிக் ஆன ஜி எஸ் டி வைத்து விளம்பர போஸ்டர்கள் ரெடி செய்தார். GST for Meyaadha Maan – Growing shows & Theatres.

#meyadhamaan #GST #Controversy #CinemaPettai

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

 

அதே போல் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் மேயாத மான் படத்தில் ஒரு சர்ச்சை உள்ளது, அதை நான் 7 மணிக்கு அப்டேட் செய்கிறான் என்று ஒரு டீவீட்டை தட்டி விட்டார்.

பின்னர் இதுவே அந்த சர்ச்சை என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

“எங்க படம் பேரு மேயாத மான். கடைசி ரீல் வரைக்கும் எங்க படத்தில் காண்ட்ரோவார்சியே இல்லை.ஜிஎஸ்டி பத்தியும் எங்க படம் பேசல, எங்க படமும் ஜிஎஸ்டி பத்தி பேசல மெடிக்கல் மாபியா பற்றி படம் பேசல,படமும் மெடிக்கல் மாபியா பத்தி பேசல. காண்ட்ரோவார்சியே வேணாமா புள் கஜ கஜா மேல போய்டலாமா” என்று வைபவ் ஒரு நாயிடம் பேசுவது போல நம் அரசியல்வாதிகளை தாக்கினார். இந்த விடியோவும் வைரலாகி விட்டது.

சினிமாபேட்டை காமெண்ட்ஸ்: தொலைத்த இடத்தில தான் பொருளை தேட வேண்டும் என்று சொல்லுவது போல, மெர்சல் படத்தால் தான் இவருக்கு சின்ன லெவல் ஒப்ப நிங் கிடைத்தது. எனவே இவர் மெர்சல் படத்தின் சர்ச்சை விஷயங்களை வைத்து தன் படத்தை ப்ரொமோட் செய்யவது சரியான விஷயமே என்றே பலரும் கூறிவருகின்றனர்.எது எப்படியோ படம் பணம் கல்லா கட்டுனா சரி. வாழ்த்துக்கள் கார்த்திக் சுப்புராஜ், நீங்க ஜெயிச்சிடீங்க ப்ரோ.

———————————————————–