fbpx
Connect with us

Cinemapettai

தனுஷின் அசுரன் பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ரியாக்ஷன் இது தான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தனுஷின் அசுரன் பார்த்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ரியாக்ஷன் இது தான்

தனுஷ், வெற்றிமாறன், வேல்ராஜ், ஜி வி பிரகாஷ் கூட்டணியில் வெளியாகியுள்ள படமே அசுரன். வெக்கை என்ற நாவலின் தழுவல். பழிவாங்கும் ஆக்ஷன் ட்ராமா படம். வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இங்கு படம் ரிலீஸாகியுள்ள நிலையில், தனுஷ் பிஸியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கம் படத்தில் நடித்து வருகிறார். D 40 மொத்தப்படக்குழுவுக்கு லண்டனில் ஸ்பெஷல் ஷோ அசுரன் பார்க்க ஏற்பாடு செய்தும் கொடுத்துள்ளார்.

இதில் படம் பார்த்துவிட்டு தன் ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

“அசுரன் தீர்க்கமான, எமோஷனலான, உண்மையை நெத்தியடியாக சொல்லும், உருக்கமான அற்புதமான படம். ஜாதி என்ற பெயரில் செருப்படியும், அதனால் வந்த வன்முறையும் மிகவும் பிடித்திருந்தது.

தலைவணங்குகிறேன் சிறந்த படைப்பாளி வெற்றிமாறன் சார், அசாத்தியமான அசுர நடிகன் தனுஷ், மற்றும் ஒட்டுமொத்த நடிகர்கள், படக்குழுவுக்கும் இந்த தலைசிறந்த படத்திற்கு.”

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top