தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் D 40க்கு – எம்.ஜி.ஆர் பட தலைப்பா ?

தனுஷ் நடிக்கும் பல படங்களில், முக்கியமான பிரம்மாண்ட ப்ரொஜெக்ட் தான் தனுஷ் – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படம். எ வை நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை. தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். மேலும் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ (கேம் ஆப் த்ரோன்ஸ் தொடரில் லார்ட் கமாண்டர் ஜியோர் மோர்மோன்ட் ரோலில் நடித்து அசத்தியவர்) முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.

ஆக்ஷன் திரில்லர் ஜானர் ஆன இப்படத்திற்கு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ என எம்.ஜி.ஆர் அவர்களின் தலைப்பு வைப்பார்கள் என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

லண்டனில் பூஜையுடன் துவங்கியது. இப்படத்திற்கு லண்டனில் தொடர்ச்சியாக முழுவதும் முடித்துவிட்டு பின்னர் தான் இந்தியா வருகின்றனர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்கு.

“எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தை டிஜிட்டல் தரத்தில் மற்றும் காரணத்தால், அந்த தலைப்பு கிடைக்காது என்றும் சொல்லி வருகின்றனர் வேறு சிலர்.

Leave a Comment