Tamil Cinema News | சினிமா செய்திகள்
கார்த்திக் சுப்புராஜ் – ரஜினிகாந்த் படத்தில் நடிக்க இருக்கும் 22 வயது இளம் நடிகை.!
ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருக்கும் படத்தில் ஒரு இளம் நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு ரஜினிகாந்த் நடிக்க மாட்டார் என சமூக வலைத்தளங்களில் தகவல் வைரலாக பரவியது. ஆனால், அரசியல் ஒரு பக்கம் சென்றால் நடிப்பு ஒரு பக்கம் என லாஜிக் வைத்த தலைவர் மாஸாக தனது அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆனார். ஒரு நேரத்தில் விஜயை இயக்கி வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரித்து வருகிறது. இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் படத்தை தயாரிக்கிறார். இது ரஜினியின் அரசியல் வாழ்வு தொடங்கியதும் எடுக்கப்படும் முதல் படம் என்பதால் மசாலா கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. பாடலில் கூடுதல் ஸ்ருதியை சேர்க்க ராக் ஸ்டார் அனிருத் இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ஹை பீக்கில் இருக்கிறது.
இப்படத்தில் ரஜினியை தவிர விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. தொடர்ந்து, பாபி சிம்ஹா, சனத் ஷெட்டி ஆகியோரும் சனத் ரெட்டி உள்ளிட்டோரும் ஒப்பந்தமாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ரஜினிக்கு ஜோடி தேர்வு தான் பல நாட்களாக நடைபெற்று வருகிறது. படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்ப கார்த்திக் நடிகையை வலை வீசி தேடி வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு இமயமலை பகுதிகளில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், இப்படத்தில் மேகா ஆகாஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேகா ஆகாஷ் தற்போது தனுஷ் நடிக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் நாயகி வேடம் மட்டுமல்லாது ரஜினியின் மகள் வேடம் ஒன்று இருப்பதால், மேகா ஆகாஷ் அதற்கு தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பார் என கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை
