கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்திற்கு மெகா சம்பளம் கொடுக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

rajinikanth

காலா மற்றும் 2.ஓ படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்டார் சூப்பர்ஸ்டார். அரசியல் குறித்த அறிவிப்பை வெளிட்டு தனது ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கும் ரஜினிகாந்த், இமயமலையில் ஆன்மீக பயணத்தை முடித்து கொண்டு, தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அரசியலில் தான் வந்து விட்டாரே படங்களில் இனி நடிப்பது அரிதோ என ரசிகர்கள் குழம்பி இருந்தனர். அத்தனை கேள்விகளுக்கும் ஒரே பதிலாக தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.

அதிகம் படித்தவை:  உங்களுக்கு சின்ன வயசுல பாடம் சொல்லிக்கொடுத்த டீச்சர், பிச்சை எடுப்பதை பார்த்தா; என்ன சார் பண்ணுவீங்க ?

பெரிய இடைவெளிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். அனிருத் முதல்முறையாக ரஜினிகாந்த் படத்திற்கு இசையமைக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். நாயகி வேட்டை நடைபெற்று வருகிறது. படக்குழுவே மக்களை பெரிதும் ஈர்த்து விட்டதால் இப்படத்திற்கு மாஸ் ஓபனிங் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் படித்தவை:  விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் `மதுரவீரன்' படத்தின் ட்ரெய்லர்!
rajinikanth

இந்நிலையில், இப்படத்திற்காக ரஜினிகாந்திற்கு ரூ. 65 கோடி சம்பளம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நாயகர்கள் சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தால் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. பெரிய கம்பெனியால் கொடுக்கப்படுவதை பட்ஜெட் கம்பெனியால் கொடுக்க முடியாது. குறைத்து கொள்ளுங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். தொடர்ந்து, அதற்கான சிறப்பு சந்திப்பு கூட்டமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ரஜினிகாந்தின் இந்த சம்பளம் திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.