Tamil Cinema News | சினிமா செய்திகள்
தனுஷின் அடுத்த கேங்க்ஸ்டர் அவதாரம்.. இயக்கப்போவது ரஜினி டைரக்டர்.. செம மாஸ்

தனுஷின் அடுத்த படம் ஒரு கேங்ஸ்டர் மூவி மற்றும் திரில்லர் மூவி என்று தெரிவித்துள்ளனர். இயக்கபோவது ஜிகர்தண்டா போன்ற தரமான கேங்ஸ்டர் மூவியை எடுத்து வெற்றி பெற்ற கார்த்திக் சுப்புராஜ். ஜிகர்தண்டாவின் மாபெரும் வெற்றி கூட இப்படத்திற்கான வாய்ப்பாக கூட இருக்கலாம்.
கார்த்திக் சுப்புராஜின் அனைத்து படங்களிலும் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இருப்பார். அதேபோல் இந்தப் படத்திற்கும் சந்தோஷ் நாராயணன். பேட்ட படத்தின் வெற்றிக்குப் பின் அவர் இயக்கவிருக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும்.
தமிழ் சினிமாவில் மாமனார் மற்றும் மருமகனை வைத்து இயக்கவிருக்கும் ஒரே டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் என்றே கூறலாம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆகஸ்டில் அமெரிக்காவில் வைத்து தொடங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது ஒரு ஹாலிவுட் படம் அளவிற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுவே தமிழில் முதல் படம். இவர் சுந்தர்.சி இயக்கத்தில் விஷாலுடன் மற்றும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுபேட்டை ,வடசென்னை போன்ற கேங்க்ஸ்டர் படங்களில் நடித்து அனுபவத்தின் மூலம் மீண்டும் ஹாலிவுடில் பிரபலமாக உள்ளார் தனுஷ் இந்த படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.
I am super exited about my next project, which will be directed by @karthiksubbaraj and produced by @sash041075 of #ynotstudios with a brilliant cast and crew. Can’t wait for this to start next month in London.
follow @StudiosYNot for further updates. pic.twitter.com/M3ZvO0Z7YS
— Dhanush (@dhanushkraja) July 19, 2019