பீட்ஷா, ஜிகர்தண்டா என தரமான படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் அடுத்து இறைவி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை உலகம் முழுவதும் வரவுள்ளது.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன் பெயரை விட்டுவிட்டார் என ராதாரவி தொகுப்பாளரை திட்டினார், உடனே பெண்கள் பெருமை பேசும் படத்தின் நிகழ்ச்சியிலேயே இப்படி நடக்கலாமா? என்று கேட்க ஆரம்பித்து விட்டனர்.

அதிகம் படித்தவை:  எதிரெதிர் துருவங்களாக இருந்த ராதாரவியும் விஷாலும் இணைந்து நடித்தனர்

இந்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கார்த்திக் சுப்புராஜ் ஒரு பேட்டியில் ‘இந்த படத்தில் சொல்ல வருவதே இது தான், ராதாரவி சார் செய்தது தவறு தான்.

ஆனால், அதற்காக பெண்ணை இப்படி திட்டலாமா என நீங்களே என் குறுகிய வட்டத்திற்குள் அடைப்படுகிறீர்கள், இதை நீங்கள் உடனே மைக்கை பிடித்து கூறியிருக்கலாமே, ஆண், பெண் என்ற வேறுபாடு இருக்க கூடாது, அதே தொகுப்பாளர் ஆணாக இருந்தால் ராதாரவி சார் இன்னும் மோசமாக திட்டியிருப்பார், இருந்தாலும், இறைவி குழுவின் சார்பாக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என கூறியுள்ளார்.