என்னை எட்டி உதைத்த சூர்யா:

அண்ணன் என்னை சின்ன வயதில் என்னை எட்டி உதைப்பார். ஆனால் தற்போது எனக்காக படத்தை தயாரித்து இருக்கிறார் என கார்த்தி தெரிவித்து இருப்பது வைரலாக பரவி வருகிறது.

surya
surya

தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்திக் நடிக்கும் படம் கடைக்குட்டி சிங்கம். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. கார்த்திக்கு ஜோடியாக சாயிஷா சைகலும், சின்னத்திரை டூ பெரியதிரையில் ஹிட் அடுத்த பிரியா பவானிசங்கர் நடித்துள்ளனர். அர்த்தனா பினு, சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.

அதிகம் படித்தவை:  புஸ்வானமாக பொங்கி அனைந்த கொல்கத்தா : பெங்களூரு அணியும் தள்ளாட்டம்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவுடன், திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி, கடைக்குட்டி சிங்கம் படப்பிடிப்பை பாண்டிராஜ் மிகத் தெளிவாக ப்ளான் செய்தே செய்தார். படத்திற்காக அவர் உருவாக்கி இருக்கும் 28 கதாபாத்திரங்களும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தின் பாடல்கள் நன்றாக வந்துள்ளன.

அதிகம் படித்தவை:  "பீப் பாடல்" சர்ச்சைகளுக்கு பிறகு மிண்டும் இணணயும் சிம்பு, அனிருத்!

என் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்துக்கூட பார்த்தது இல்லை.இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. அண்ணனுடன் நான் இணைந்து இருப்பது இதுவே முதன் முறை. சின்ன வயதில் அக்காவிடம் களைப்பாக இருக்கிறது எனக் கூறினால் காப்பி கிடைக்கும். அதுவே அண்ணனாக இருந்தால் உதை நன்றாக வரும். அண்ணா கிட்ட தண்ணி கேட்டா கூட போய் குடிச்சா குடி இல்லாட்டி போ-னு எட்டி உதைப்பார் என கலகலப்பாக தெரிவித்து இருக்கிறார்.