Tamil Cinema News | சினிமா செய்திகள்
நரகாசூரன் ரிலீஸ் தகவலை பகிர்ந்த கார்த்திக் நரேன்.. சூப்பர்மா வீ ஆர் வைட்டிங்
டி 16 படம் வாயிலாக சினிமா துறையில் பலரின் கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். இவர் இயக்கத்தில் மாஃபியா ரிலீசுக்கு ரெடியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படமே நரகாசூரன். அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித், ஷரியா சரண், ஆத்மிக்கா ஆகியோர் நடிப்பில் ரெடியாகி உள்ள சஸ்பென்ஸ் திரில்லர் வகையறா.
பல பிரச்சனைகளை சந்தித்த இப்படம் கிடப்பில் தான் இருக்கிறது. கவுதம் மேனன் – கார்த்திக் நரேன் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு கோடம்பாக்கம் அறிந்ததே. இந்நிலையில் கார்த்திக் நரேன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எனை நோக்கி பாயும் தோட்டா படமே ரிலீசாகி விட்டது, நரகாசூரன் படம் எப்போ ரிலீஸ் என கமெண்டில் ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு படம் கட்டாயம் மார்ச் 2020 என பதில் தட்டியுள்ளார்.

karthik naren instagram
லைக்கா புரொடக்ஷன்ஸ் அல்லது வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷ்னல் யார் உதவியுடன் இப்படம் ரிலீஸ் ஆகிறது என பொறுத்திருந்தே தெரிந்துக்கொள்ள முடியும். காத்திருப்போம்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
