fbpx
Connect with us

Cinemapettai

யோவ்.. OTTல ஆச்சும் படத்தை ரிலீஸ் பண்ணுயா.. கௌதம் மேனன் மீது கொலவெறியில் கார்த்திக் நரேன்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

யோவ்.. OTTல ஆச்சும் படத்தை ரிலீஸ் பண்ணுயா.. கௌதம் மேனன் மீது கொலவெறியில் கார்த்திக் நரேன்

ஒரு சில இயக்குனர்கள் படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் போதே சைடில் சில சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு குழியில் விழுந்து விடுகின்றனர். அந்த வழியில் லிங்குசாமியை தொடர்ந்து அதல பாதாளத்தில் மாட்டிக் கொண்டவர் தான் இயக்குனர் கௌதம் மேனன்.

இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. ஆனால் இவர் தயாரிக்கும் படங்கள் பெரிதாக செல்லவில்லை. இதனால் கடன் சுமையில் தவித்து வருகிறார். தற்போது வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தான் கௌதம் மேனனை தத்துக்கு எடுத்துள்ளது என்றும் கோலிவுட் வட்டாரங்களில் கிசுகிசுக்கள் வருகின்றன.

இந்நிலையில் கௌதம் மேனனிடம் சிக்கி விழிபிதுங்கி கிடக்கும் இயக்குனர் தான் கார்த்திக் நரேன். துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் அனைவரையும் அசரடித்த கார்த்திக் நரேன் இயக்கத்தில் அரவிந்த்சாமி, ஆத்மிகா நடிப்பில் உருவான படம் நரகாசுரன். இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்தன.

ஆனால் கடன் சுமையால் தவித்து வரும் கௌதம் மேனன் இந்த படத்தை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார். இது காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் நரேன் சமீபத்தில் இயக்கிய மாபியா படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருந்தாலும் தனுஷ் பட வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் தனுஷ் நரகாசுரன் படத்தை பார்த்து விட்டால் இன்னும் கொஞ்சம் நம்பிக்கையுடன் இருக்கலாம் என நினைப்பதாக தெரிகிறது. நரகாசுரன் படத்திற்கு எப்போது தான் விடிவு காலம் வரும் என கௌதம் மேனன் மீது கொலவெறியில் உள்ளாராம் கார்த்திக் நரேன். தற்போது இணையதளத்தில் படங்களை வெளியிடும் கலாச்சாரம் தோன்றி விட்டதால் அட்லீஸ்ட் OTTல ஆச்சும் ரிலீஸ் பண்ணும்படி கெஞ்சுகிறாராம்.

Continue Reading
To Top